உண்மையை சொன்னால் ராதா ஜெயிலுக்கு தான் போவார்.. நடிகை அம்பிகா கடும் எச்சரிக்கை!

1 month ago 2
ARTICLE AD

வீட்டு பிரச்னையை வீட்டினுள் முடித்து விடலாம் என நினைத்தேன். ஆனால் ராதா வெளியில் கொண்டு வந்து விட்டார் என நடிகை அம்பிகா வேதனை தெரிவித்துள்ளார்.

தான் கையெழுத்திட்ட காசோலையைப் பயன்படுத்தி ரூ.46 கோடி மோசடி செய்ததாக தனது சகோதரி நடிகை அம்பிகா மீது, நடிகை ராதா போலீசில் புகாரளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இன்று அம்பிகா தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, என்னுடைய சகோதரி ராதா என்மேல் போலீசில் புகாரளித்துளார். இதுதொடர்பாக ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகிறது. ஏன் ராதா புகாரளித்தார்?, அம்பிகா ஏன் பேசாமல் இருக்கிறார் என பலரும் கேள்வியெழுப்பிய நிலையில் தான் நான் ஊடகத்தில் பேச நினைத்தேன்.  அம்பிகா என்னிடம் காசோலை கொடுத்ததும்  அந்த காசோலைக்கு பணம் வழங்காமல் தடுத்ததும் உண்மை தான். அவர் புகார் கொடுக்கும்போது ஏன் அதை சொல்லவில்லை. ஏஆர்எஸ் கார்டன் என்னுடைய குழந்தை மாதிரி. அதனை என் அம்மா பணம் கொடுத்து தான் வாங்கினார். எம்ஜிஆர் எங்களுக்கு இலவசமாக கொடுக்கவில்லை. ஏஆர்எஸ் என பெயர் வைக்க ஐடியா அவர் தான் கொடுத்தார்.

ஏஆர்எஸ் கார்டன் தொடர்பான பிரச்னை ரொம்ப நாளாக நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பேசிப் பார்த்தும் பலனளிக்கவில்லை. ஏஆர்எஸ் என தயாரிப்பு நிறுவனம் பற்றி கேட்டால் பதில் இல்லை. இதுகுறித்து போலீசில் புகாரளித்தும் விசாரணைக்கு வரவில்லை. என்னுடைய நகைகள் பற்றி கேட்டாலும் எதுவும் சொல்ல மறுக்கிறார். ராதாவைப் பொறுத்தவரை தங்கத்தின் மீது அதீத ஈர்ப்பு கொண்டவர். அது அவரின் பலவீனம் என சொல்லலாம்.

என் அம்மா இறந்தபோது சொத்துகள் பகிர்வுகள் குறித்து ஆவணம் உள்ளது. ஏஆர்எஸ் கார்டனில் உள்ள அம்பிகா பெயர் தூக்கப்பட்டு விட்டது. நான் உயிரோடு தானே இருக்கிறேன். ராதா தன்னுடைய லக்கேஜ், ஹேண்ட்பேக்கிற்கு லாக் போட்டு வைக்கும் பழக்கம் கொண்டவர். அப்படியிருப்பவர் கையெழுத்து போட்ட காசோலையை வைத்து விட்டு சென்றால் சொன்னால் நம்ப முடிகிறதா?..

ஏஆர்எஸ் கார்டன் சொத்தில் 50 சதவிகிதம், 1299 கிராம் நகையை வைத்துக் கொண்டு தராததற்கு என இரண்டு காசோலைகள் கொடுத்து விட்டு அதனை கொடுக்காமல் நிறுத்தினார்கள். பணம் போனது எனக்கு தான். வீட்டு பிரச்னையை வீட்டினுள் முடித்து விடலாம் என நினைத்தேன். இரண்டரை மாதம் முன்னரே கமிஷனர் ஆபீஸில் புகாரளித்தேன்.  இதெல்லாம் யாருக்குமே தெரியாது. ராதாவின் மகள் திருமணத்திற்கு வேலைக்காரி போல சென்று வேலை பார்த்தேன். அப்படியிருக்கும் நிலையில் ஏன் இந்த விஷயத்தைப் பொதுவெளிக்கு கொண்டு வந்தார் என தெரியவில்லை.

எனக்கு தான் மொத்தம் ரூ.97 கோடி வரவேண்டியுள்ளது. அதை கொடுக்க மறுத்து தான் இந்த புகாரை கொடுத்திருக்கிறார்கள். ராதா கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆனதற்கு நான் தான் போலீசில் புகார் கொடுத்திருக்க வேண்டும். அதற்குள் ராதா முந்திக்கொண்டார். நாங்கள் நடந்ததை சொன்னால் ராதா ஜெயிலுக்கு போக வேண்டிய சூழல் ஏற்படும் என அம்பிகா கூறியுள்ளார்.

Read Entire Article