சவுதி அரேபிய மருத்துவமனைகளில்‌ பணிபுரிய பெண்‌ செவிலியர்களுக்கான ஒர்‌ அரிய வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் விருப்பம்‌ உள்ளவர்கள்‌ உடனடியாக விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது‌.

சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில்‌ பணிபுரிவதற்கு குறைந்தபட்சம்‌ இரண்டு வருட பணி அனுபவத்துடன்‌ ன் B.sc Nursing தேர்ச்சி பெற்ற, 35 வயதிற்குட்பட்ட பெண்‌ செவிலியர்கள்‌தேவைப்படுகிறார்கள்‌.

தேர்வு முறை எப்படி?

இவர்களுக்கான நேர்காணல்‌ வருகிற 23.02.2025 முதல்‌ 26.02.2025 வரை கொச்சியில்‌ நடைபெற உள்ளது. மேற்படி பணியாளர்களுக்கு உணவுப் படி, இருப்பிடம்‌, விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின்‌ வேலை அளிப்பவரால்‌ வழங்கப்படும்‌ என்றும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனம்‌ மூலமாக அளிக்கப்படும்‌ வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக் காலியிடங்கள்‌ குறித்த விவரங்கள்‌ இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in-ல்‌ கண்டு பயனடையுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படு கிறார்கள்‌.

ஊதியம் எவ்வளவு?

மேலும்‌ ஊதியம்‌ மற்றும்‌ பணி பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின்‌ வாயிலாக அறிந்து கொள்ளலாம்‌ (6379179200) (044-22505886 / 044-22502267)

விண்ணப்பிப்பது எப்படி?

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும்‌ விருப்பமும்‌ உள்ளவர்கள்‌ www.omcmanpower.tn.gov.in என்ற அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின்‌ வலைதளத்கில்‌ தவறாமல்‌ பதிவுசெய்துகொண்டு தங்களின்‌ சுய விவர விண்ணப்பப் படிவம்‌, கல்விச் சான்றிதழ்‌ பாஸ்போர்ட்‌ (855007) அனுபவச் சான்றிதழ்‌ ஆகியவற்றை
[email protected] என்ற இந்நிறுவனத்தின்‌ மின்னஞ்சலுக்கு 18/02/2025 க்குள்‌ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்‌.

சிறப்பு தகுதி:- Saudi Professional Classification. HRD & Dataflow முடித்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌.

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள்‌ நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின்‌ மூலம்‌ பயனடையுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

படிப்பு மற்றும்‌ பணி விவரங்களின்‌ தகுதியைப்‌ பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும்‌, இந்தப் பணிக்கு தேர்வு பெறும்‌ பணியாளர்களிடமிருந்து சேவைக்‌ கட்டணமாக ரூ.35,400/- மட்டும்‌ வசூலிக்கப்படும்‌ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.