உடனே அகற்றுங்க! ஏ1, ஏ2 பால் பொருட்களா? உணவு நிறுவனங்களுக்கு உணவுத் தர அமைப்பு அதிரடி உத்தரவு

1 year ago 7
ARTICLE AD

உணவுப் பொருட்களின் தரம் மற்றும் ஆரோக்கியத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு செயல்பட்டு வருகிறது.

ஏ1 மற்றும் ஏ2 பால் பொருட்கள்:

பால் மற்றும் பால் சாரந்த பொருட்களை விற்பனை செய்யும் உணவு நிறுவனங்கள் ஏ1 மற்றும் ஏ2 என்று வகைப்படுத்தி பால், நெய், தயிர் போன்ற பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. உணவு பாதுகாப்பு மற்றும் தர நிரணய அமைப்பின் எண் அல்லது பதிவுத் தொடர்பு எண்களில் இதுபோன்று உணவு நிறுவனங்கள் பால், நெய் மற்றும் வெண்ணெய் போன்ற பால் பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிப்படி இதுபோன்று எந்த இடத்திலும் ஏ1 மற்றும் ஏ2 என்று வகைப்படுத்தவில்லை. எனவே, அந்த பால் தயாரிப்பு பொருட்கள் மீது உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பின் உரிமை கோரல்களைப் பயன்படுத்துவது விதிமீறல் ஆகும். இதையடுத்து, இந்த உரிமைகோரல் லேபிள்களை அந்தந்த உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உடனடியாக நீக்க உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

காரணம் என்ன?

மேலும், ஆன்லைன் வர்த்தக தளங்களில் இருந்து ஏ1 மற்றும் ஏ2 என்று வகைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து உரிமை கோரல்களையும் அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு தயாரிப்பு நிறுவனங்கள் இந்த உத்தரவை கட்டாயம் கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக எந்த ஒரு உணவு நிறுவனங்களுக்கும் கால அவகாசம் வழங்கப்படாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.  இந்த ஏ1 மற்றும் ஏ2 வகைப்படுத்தல் காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் வீண் குழப்பம் ஏற்படுவதுடன் தவறான புரிதல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது என்பதால் இந்த நடவடிக்கை உணவுத் தர நிர்ணய அமைப்பு மேற்கொண்டுள்ளது.

Read Entire Article