'32' வடிவங்களில் அருள்பாலிக்கும் விநாயகர் !

32 விநாயகர் நாமங்களையும் நாம் உச்சரிக்கும் பொழுது வாழ்க்கையில் நம்மை பிடித்திருக்கின்ற எவ்வளவு பெரிய தொல்லையானாலும் விலகிவிடும்…. விநாயகர் என்றாலே பலம் பொருந்தியவர் நடக்கவே நடக்காது என்று இருக்கின்ற காரியங்களை கூட நடத்திக் காட்டும் வித்தகர்... அதனால் தான் ஒவ்வொரு தெருக்களிலும் நம் விநாயகர் நமக்காக வரங்களைத் தர அமர்ந்திருக்கிறார்…

உங்கள் சங்கடங்களை தீர்க்க வருகிறார் "வெற்றி விநாயகர்"...!!!

விநாயகனே...
வினை தீர்ப்பவனே….
வேழ முகத்தோனே...
ஞால முதல்வனே..

அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே நாம் எந்த காரியத்தை எடுத்தாலும், அதில் முழு முதல் கடவுளாய் நம்மை ஆசீர்வதித்து... நடக்கின்ற காரியங்களை நல்லபடியாக முடித்துக் கொடுக்கும் மங்களகரமான ஞானமூர்த்தி நம் ”விநாயகர்”...!!!

விநாயகருக்கு 32 விதமான முகங்கள் இருக்கின்றன... அவை 'சோடச கணபதி' என்று 16 வகைகளுடன், அடுத்த ’ஏக விம் சதி’ என்ற 16 வகைகளுடன் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக, காணக்கிடைக்காத ரூபங்களில் நமக்கு காட்சியளிக்கிறார். அந்த சொரூபத்தை பற்றி நாமும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

1. பால கணபதி,
2. தருண கணபதி,
3. பக்தி கணபதி,
4. வீர கணபதி,
5. சக்தி கணபதி,
6. துவிஜ கணபதி,
7. சித்தி கணபதி,
8. உச்சிஷ்ட கணபதி,
9. விக்ன கணபதி,
10. க்ஷிப்ர கணபதி,
11. ஹேரம்ப கணபதி,
12. லட்சுமி கணபதி,
13. மகா கணபதி,
14. விஜய கணபதி,
15. நிருத்த கணபதி,
16. ஊர்த்துவ கணபதி,
17. ஏகாட்சர கணபதி,
18. வர கணபதி,
19. த்ரயக்ஷர கணபதி,
20. சிப்ரப்ரசாத கணபதி,
21. ஹரித்ரா கணபதி,
22. ஏகதந்த கணபதி,
23. சிருஷ்டி கணபதி,
24. உத்தண்ட கணபதி,
25. ருணமோசன கணபதி,
26. துண்டி கணபதி,
27. துவிமுக கணபதி,
28. மும்முக கணபதி,
29. சிங்க கணபதி,
30. யோக கணபதி,
31. துர்க்கா கணபதி,
32. சங்கடஹர கணபதி....

மேலே குறிப்பிட்ட விநாயகரின் நாமங்களை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள் சமாளிக்கவே முடியாத பிரச்சனைகளில் நீங்கள் இருக்கும் பொழுது இந்த விநாயகரின் நாமங்களை உச்சரியுங்கள் கதவுகள் திறக்கும் வினைகள் தீரும்…

முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தவர்களுக்கு இரண்டாம் வாழ்க்கையை மிகச் சிறப்பாக அமைத்துக் கொடுக்கும் வல்லமை பெற்றவர். குழந்தை பிறந்து வயிற்றில் தங்காமல் போனால் உங்களுக்கு மழலைச் செல்வத்தை வழங்க தயாராக இருப்பவர்.. வீடு கட்டி பாதியிலேயே நின்று அதை முடிக்க முடியாமல் திணறினால் பிரம்மாண்ட வீட்டை கட்டி முடிக்க உதவுபவர்… எதிரிகளின் தொல்லையால் தாங்க முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் புகலிடமாக விளங்கும் வெற்றி விநாயகர்…

நீண்ட நாட்களாக பிரமோஷன் கிடைக்கவில்லை எனக்கு பின்னால் வந்தவர்களுக்கெல்லாம் பிரமோஷன் போட்டு மேலே சென்று விட்டார்கள் என்று ஆவலோடு காத்திருப்பவர்களுக்கு விநாயகரின் அருளால் பிரமோஷன் கிடைக்கும்… நீண்ட நாட்களாக கடுமையான நோய் இருக்கிறது எப்பொழுது தீரும் என்று தெரியவில்லை என சோகத்தோடு இருக்கும் அன்பர்களே விநாயகரின் வழிபாடு மூலமாக நோய் குணமாகி விடுதலையை பெறுவீர்கள்…

விநாயகரை வழிபடுவதன் மூலம் உங்களுக்கு சிறந்த வழிகாட்டுதல் கிடைக்கும் 32 விநாயகரின் நாமங்களை தவறாமல் உச்சரியுங்கள் வாழ்க்கையில் வளம் பெறுங்கள்….