அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் வலியுறுத்தி வந்த நிலையில், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இருவரும் ஒரே காரில் பயணம் செய்வது பேசுபொருளாக மாறியுள்ளது.

ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒரே கார் பயணம்

மதுரையில் இருந்து ஒரே காரில் கேஎஸ்சும் ஓபிஎஸ்ஸும் பசும்பொன்னை நோக்கிச் செல்கின்றனர். முன் சீட்டில் ஓபிஎஸ்ஸும் பின் சீட்டில் செங்கோட்டையனும் அமர்ந்துள்ள காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இவர்களுடன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அமமுகவைத் தொடங்கிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் இணைவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஒன்றிணையும் மூவர் கூட்டணி

அதாவது பசும்பொன்னில் ஓ.பன்னீர் செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேவருக்கு அஞ்சலி செலுத்துவர் என்று கூறப்படுகிறது.

அதிமுகவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதால், கட்சியில் இருந்து டிடிவி தினகரன் முதலில் நீக்கப்பட்டார். தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸை நீக்கினார். இதற்கிடையே அண்மையில் பிரிந்தவர்களை ஒருங்கிணைத்து வலிமையான அதிமுகவை உருவாக்க வேண்டும் என்று பேசிய செங்கோட்டையனின் கட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் பறித்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.