இவன் ஹீரோவா..50 ஹீரோயின்கள் ரிஜக்ட் செய்தார்கள்..நடிகர் KPY பாலா இவ்வளவு அவமானப்பட்டாரா!

3 months ago 4
ARTICLE AD

ரியாலிட்டி ஷோ வழியாக சினிமாவிற்கு வந்து காமெடி ரோல்களில் நடித்து வந்த KPY பாலா தற்போது நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். அவர் நடித்துள்ள காந்தி கண்ணாடி திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை படத்தின் இயக்குநர் ஷெரிஃப் பகிர்ந்துள்ளார்

யார் இந்த KPY பாலா

விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே கவனமீர்த்தவர்தான் KPY பாலா. இவரது டைமிங் காமெடிகள் திரைப்படங்களில் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. ஒரு சில படங்களில் நடிக்கத் தொடங்கிய பாலா தனது சம்பள பணத்தில் பல சமூக சேவைகளை செய்து ரசிகர்களிடம் நற்பெயரை சேர்த்துள்ளார். மலைவாழ் மக்களுக்கு அம்புலன்ஸ் வாங்கி தருவது , ஏழை குடும்பத்திற்கு வீடு கட்டி தருவது என சக நடிகர்களுடன் சேர்ந்து சமூக பணியாற்றி வருகிறார்கள்

காமெடியன் டூ நாயகன்

இதுவரை நகைச்சுவை  நடிகனாக அறியப்பட்ட பாலா தற்போது காந்தி கண்ணாடி என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். ஷெரிஃப் இப்பத்தை இயக்கியுள்ளார்.  நமித கிருஷ்ணமூர்த்தி நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் பாலாஜி சக்திவேல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் மதராஸி படத்துடன் காந்தி கண்ணாடி படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்

பாலாவுடன் நடிக்க மறுத்த நடிகைகள்

இயக்குநர் ஷெரிஃப் பேசியபோது. " காந்தி கண்ணாடி படத்திற்காக பாலா 50 கிலோவில் இருந்து 75 கிலோ வரை  தனது எடையை கூட்டியிருக்கிறார். இப்படத்தின் கதையை நிறைய  ஹீரோயின்களிடம் சொன்னேன். கதை கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள் ஆனால் பாலா தான் ஹீரோ என்று சொன்னதும் டேட்ஸ் பார்த்து சொல்கிறேன். கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்று சொல்லி பின் நிராகரித்து விடுவார்கள். ஒரே நாளில் 12 நடிகைகளுக்கு கதை சொல்லியிருக்கிறேன். எல்லாம் கதை கேட்டுவிட்டு அப்புறம் சொல்வதாக சொல்லி பின் ஃபோன் எடுக்கமாட்டார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமானதற்கு காரணம் ஹீரோயின் கிடைக்காததால் தான் . அப்படி 50 நடிகைகள் ரிஜக்ட் செய்து 51 ஆவது ஆளாக வந்தவர் தான் நமீதா கிருஷ்ணமூர்த்தி. அவர் தான் இந்த படத்தின் நாயகியாக நடிக்க சம்மதித்தார் ." என கூறினார்.

இதனைக் கேட்ட பாலாவின் ரசிகர்கள் இன்று வேண்டுமானால் அந்த 50 நடிகைகள் பாலாவுடன் நடிக்க மறுத்திருக்கலாம். ஆனால் ஒரு ஆள் அவர் பெரிய ஸ்டாராகும் போது நிச்சயம் அவருடன் நடிப்பார்கள்" என ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

Read Entire Article