பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பவர் பிளேயில் 100 ரன்கள் எடுத்து ருத்ரதாண்டவம் ஆடிய அபிஷேக் சர்மா - டிராவிச் ஹெட் ஜோடி. மேலும், பவர் பிளேவில் அதிக ரன்கள் குவித்த அணிகளின் பட்டியலில் முதல் 3 இடங்களில் சன் ரைசர்ஸ் அணியே இருக்கிறது.

ஐபிஎல் தொடரின் 17ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. நியூ சண்டிகரின் முல்லான்பூரில் நடந்து வரும் இந்தப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்பிறகு, எஸ்ஆர்எச் அணியில் இருந்து தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினார்கள்.

முதல் ஓவரில் ரன்கள் அவ்வளவாக எடுக்காத நிலையில், அடுத்தடுத்த ஓவர்களில் இருவரும் ருத்ரதாண்டவம் ஆடினார்கள். 3.4 ஓவரில் 50 ரன்கள் குவித்த ஜோடி, அடுத்து 6 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார்கள். பவர்பிளேயில் 100 ரன்கள் எடுத்து மிரட்டியதோடு மட்டுமல்லாமல் பவர் பிளேவில் அதிக (105) ரன்கள் குவித்த அணிகளின் பட்டியலில் முதல் 3 இடங்களில் சன் ரைசர்ஸ் அணியே இருக்கிறது. இதுபோக, 18 பந்தில் அரைசதமும் எடுத்து அபிஷேக் வேறமாதிரி ஆடினார். இந்த ஜோடியை பிரிக்க பஞ்சாப் பவுலர்கள் திணறிக்கொண்டிருந்தனர்.

In the mood! 😌

🎥 Abhishek Sharma and Travis Head going BOOM early in New Chandigarh 👊

Updates ▶️ https://t.co/DUNkQi9YaV#TATAIPL | #KhelBindaas | #PBKSvSRH | @SunRisers pic.twitter.com/aJ0yHnOpMA

— IndianPremierLeague (@IPL) April 11, 2026

ஜோடியை பிரித்த ஷஷாங் சிங்

பார்ட் டைம் பவுலரான ஷஷாங் சிங் ஒரே ஓவரில் இருவரின் விக்கெட்டையும் எடுத்தார். முதலில் டிராவிஸ் ஹெட் 23 பந்தில் 38 ரன்கள், அதன்பிறகு தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த அபிஷேக்கின் விக்கெட்டை எடுத்து இந்த ஜோடியை பிரித்தார். அவர் 28 பந்தில் 74 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடி வரும் சன் ரைசர்ஸ் 18வது 200 ரன்களை கடந்து அதிரடியாக ஆடி வருகின்றனர். களத்தில் கிளாஸன், சலில் ஆகியோர் இருக்கின்றனர்.