இளைஞர்களே வேலை தேடுபவரா நீங்கள்? தமிழக அரசு ஏற்படுத்தி தரும் மிகப்பெரிய வாய்ப்பு இதோ.!

10 months ago 6
ARTICLE AD

தமிழக அரசு, தனியார் நிறுவனங்கள் இணைந்து ஒவ்வொரு மாதமும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தி வருகின்றது. அந்த வகையில்,  நாளை சனிக்கிழமை 22.02.2025 அன்று திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் மூலம் சுமார் 10,000 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் பணிநியமன ஆணைகளை வழங்க உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரி, ஓட்டன்சந்திரம் வளாகத்தில் தமிழக அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தமிழக அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் ஆகும். தமிழக அரசு ஏற்படுத்தி தரும் இந்த வாய்ப்பில் கலந்துகொண்டு தகுதிக்கு ஏற்ப முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை பெறலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு வரை உள்ளவர்கள் கலந்துகொள்ளலாம். மேலும் ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல் படிப்பை முடித்தவர்கள் என வேலைவாய்ப்பில்லாதவர்கள் முகாமில் கலந்துகொண்டு கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை பெறலாம்.

”மனிதர்கள் தங்கள் ஆன்மாவை புதுப்பிக்க வேண்டும்” : ABP Network தலைமைச் செய்தி ஆசிரியர் அதிதேப் சர்க்காரின் முழுப் பேச்சு..!

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதன் மூலம் 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10,000 நபர்களுக்கு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைக்கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மேலும், இந்த முகாமில் கலந்துகொள்ளும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் தகுதிக்குட்பட்டு வழங்கப்படும். போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகளுக்கான பதிவுகள் மற்றும் இலவசத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான பதிவுகள் இந்த முகாமில் இளைஞர்களுக்கு செய்து தரப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSc8BDjLc7Isc1vb6K8AOpeemOAeO8-0Nb-2AXE_Vbe4bqCsog/viewform என்ற கூகுள் படிவத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசமாகும். மேலும் தனியார் வேலைவாய்ப்பு குறித்து அறிந்துகொள்ள தமிழக அரசு ஏற்படுத்தி தரும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். மேலும், உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திண்டுக்கல் என்ற முகவரியிலும், 0451-2904065 என்ற தொலைப்பேசி எண்ணுக்கும் தொடர்புகொள்ளலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பணிநியமன ஆணைகளை வழங்கி சிறப்பிக்க உள்ளனர்.

Read Entire Article