இளைஞர்களே! காலணித் தொழிற்சாலைகளில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிங்க!

5 months ago 5
ARTICLE AD

விழுப்புரம்: கிண்டியில் இயங்கும் மத்திய காலணி தொழிற்சாலையில் தொழிற்கல்வி பயில வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் விண்ணபிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

மத்திய காலணி தொழிற்சாலையில் தொழிற்கல்வி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் (SIPCOT) காலணி தொழிற்சாலை Fengtay, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் High Glory Footwear India (PoU Chen Group) மற்றும் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்டத்தில் Freetrend Industrial India Pvt Ltd, (Dean Shoes) ஆகிய காலணி உற்பத்தி நிறுவனங்கள் விரைவில் செயல்பட உள்ளது. மேற்படி நிறுவனம் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 10.000 முதல் 20,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலைகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பணியில் சேர, காலணி தயாரிப்பு தொடர்புடைய பாடப்பிரிவு படித்திருக்க வேண்டும். மேலும், இதற்கான மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை கிண்டியில் செயல்படும், மத்திய காலணி நிறுவனத்தில் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

2025-2026-ம் ஆண்டு சேருவதற்கான தொழிற் கல்வி சேர்க்கை

இந்த பயிற்சி நிறுவனத்தில். 2025-2026-ம் ஆண்டு சேருவதற்கான தொழிற் கல்வி சேர்க்கை அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள இளைஞர்கள் அதற்கான சேர்க்கை விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக் கொண்டு பயன் பெறலாம்.

விண்ணப்பிக்க அவகாசம்

விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். அதனால் விழுப்புரம் மாவட்டத்தில் 10 மற்றும் +2 வகுப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை 18.07.2025 மற்றும் 19.07.2025 தேதிகளில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்கள்

கூடுதல் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், சேகர் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரின் கைப்பேசி எண்களில் 9677943633, 9677943733 மற்றும் 9025997996 தொடர்பு கொள்ளலாம் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விரைவில் விழுப்புரம். கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் செயல்படவுள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களில் வேலைளய்ப்பு பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Read Entire Article