ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் பயன்பெறும் வகையில், அழகுக்கலை மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் www.tahdco.com என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

(Master Certification in Bridal Makeup Artistry Course)

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, தற்போது தாட்கோ, மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை (Master Certification in Bridal Makeup Artistry Course) மற்றும் சிகை அலங்காரம் (Diploma in Creative hair dressing chemical treatment Courses) ஆகிய பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.

இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராகவும், பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு18 முதல் 35 வயதிற்குள்ளும், மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ,3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். இப்பயிற்சி வகுப்பானது திருச்சி மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதிபெறும் நபர்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதாற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.

வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

மேலும், இப்பயிற்சியில் தேர்ச்சி பெறும் தகுதியான நபர்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்நிறுவனத்தின் மூலமாக ஆரம்ப கால மாத ஊதியமாக சுமார் ரூ.15000/- முதல் ரூ.25,000/- வரையும் வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எனவே, மேற்குறிப்பிட்டுள்ள பயிற்சிகளை பெற விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள், தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.