இறந்த மனைவியின் உடல் கணவன் வீட்டு முன்பு தகனம்! புதுக்கோட்டையில் பரபரப்பு!

1 year ago 7
ARTICLE AD

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியை சேர்ந்த புவனேஸ்வரி(27) என்ற பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த தாய் மாமன் மகனாகிய பழனிராஜ் என்பவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

பழனிராஜ் திருமணம் ஆன ஒரு வருடத்திலேயே அதே ஊரைச் சேர்ந்த பிரபா என்ற வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நாகர்கோவில் பகுதியில் வாழ்ந்து வருவதாகவும், இவர்களுக்கு இரண்டு குழந்தை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

புவனேஸ்வரி கடந்த இரண்டு வருடமாக தன் கணவனைப் பிரிந்து தாயார் வீட்டில் இருந்து வருகிறார். தனது தந்தையும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி, இரவு தன்  தந்தை வீட்டின் அருகே இருந்த  கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் கிணற்றுக்குள் இறங்கி புவனேஸ்வரியை சடலமாக மீட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த புவனேஸ்வரியின் உறவினர்கள் புவனேஸ்வரியின் சடலத்தை, கணவர்பழனிராஜ் வீட்டின் முன்பு வைத்து பழனிராஜைக் கைது செய்ய வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலைத்த ஆலங்குடி போலீசார் சம்பவத்தில் இருந்து வந்து புவனேஸ்வரன் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் புவனேஸ்வரியின் உடல் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

பின்னர் அவரது உடலை ஊருக்குக் கொண்டு வந்த அவரது உறவினர்கள், பழனிராஜ் வீட்டின் முன்பாக புவனேஸ்வரியின் உடலை தகனம் செய்த சம்பவம் அப்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தின் காரணமாக ஆலங்குடி பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.இந்நிலையில் சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Entire Article