இன்று தான் லாஸ்ட்.! இல்லைனா தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களுக்கு தடை - தேர்தல் ஆணையம் அதிரடி

2 days ago 2
ARTICLE AD

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என பல்வேறு அரசியல் கட்சி சார்பாகவும்,சுயேட்சைகளும் களத்தில் இறங்கினர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 4023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்த வகையில் வேட்பாளர்கள் ஒரு தொகுதிக்கு  40 லட்ச ரூபாய் வரை தேர்தல் செலவு மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது. இதன் படி கார் செலவு, பிரச்சார செலவு, பிரச்சாரத்திற்கு வந்த தொண்டர்களுக்கு உணவு வாங்கி கொடுத்தது. பேனர் வைத்தது என பல்வேறு செலவுகளை வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் காட்ட வேண்டும்.  வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற்றது வாக்கு எண்ணிக்கை முடிந்து ஒரு மாத காலத்தில் செலவு கணக்குகளை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

தேர்தல் செலவு கணக்கு தாக்கல்

அந்த வகையில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்கை தேர்தல் ஆணையத்துக்கு தாக்கல் செய்ய ஜூன் 3 ஆம் தேதி கடைசி நாள் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த்து. இதன் படி,  போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்குகளை முறையாக தேர்தல் ஆணையத்துக்கு தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில், தேர்தலில் போட்டியிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தங்களுடைய செலவு கணக்குகளை இதுவரை தாக்கல் செய்துள்ளனர். இதனை தாக்கல் செய்யப்பட்ட செலவு கணக்குகளை செலவின பார்வையாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் படி இன்று தான் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஜூன் மூன்றாம் தேதிக்கு பிறகு தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய இயலாது.

இன்றே கடைசி- தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

அதே நேரம் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத வேட்பாளர்களிடம் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி தேர்தல் செலவு கணக்குகளை ஏன் தாக்கல் செய்யவில்லை என விளக்கம் கேட்கும். அதற்கு அந்த வேட்பாளர் அளிக்கும் பதில் திருப்திகரமாக இருந்தால் மட்டுமே தேர்தல் ஆணையம் அதை ஏற்றுக்கொள்ளும், இல்லையென்றால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் தேர்தல் ஆணையத்தின் சார்பாக வேட்பாளர்களுக்கு தடை விதிக்கப்படும். அந்த வகையில் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்யாத வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Read Entire Article