இனி பாஸ்போர்ட்டுக்காக அலைய வேண்டாம்.. மதுரைவாசிகளே உங்களுக்கு காத்திருக்கு சர்ப்ரைஸ்

4 months ago 5
ARTICLE AD

பாஸ்போர்டுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் மற்றும் அழகர்கோயில் அருகில் வசிக்கும் பொதுமக்களும் மேலும் அருகிலுள்ள கல்லுாரியில் பயிலும் மாணாக்கர்களும் இந்த வசதியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மதுரை பாஸ்போர்ட் அலுவலகம்

தமிழகத்தின் தென் மாவட்டத்தில், 10 மாவட்ட மக்களின் பாஸ்போர்ட் சேவையை கருத்தில் கொண்டு, பாஸ்போர்ட் சேவைகளை குடிமக்களுக்கு சரியான நேரத்தில், மிக எளிய முறையில் அணுகி சிரமமின்றி வழங்குவதற்காக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகமானது 2007 ஆண்டு துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் பாஸ்போர்ட் சேவையை அதிகரிக்கும் விதமாக மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய நகரங்களில் இரண்டு பாஸ்போர்ட் சேவை (PSK) மையங்களும் மற்றும் இதன் விரிவாக்கமாக 2018 ஆம் ஆண்டு புதிதாக எட்டு தபால் நிலைய கடவுச்சீட்டு சேவை மையங்களும் (POPSK) தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

Mobile Van Passport Seva

இதை மேலும் விரிவு செய்யும் பொருட்டு தொலை தூர பகுதிகளுக்கும் பாஸ்போர்ட் சேவையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், கடவுசீட்டு சேவையை அதிகரிக்கும் பொருட்டும் மற்றும் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டும் வெளியுறவு துறை அமைச்சகமானது நடமாடும் பாஸ்போர்ட் அலுவலக சேவை (Mobile Van Passport Seva) என்ற சேவையை அறிமுகப்படுத்தி செயல்பட்டு வருகிறது.

80 விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் சமர்பிக்க வேண்டும்

இந்த சேவையானது மதுரை அழகர்கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் வளாகத்தில் வைத்து நாளை 29.07.2025 (செவ்வாய்) மற்றும் 30.07.2025 (புதன்) ஆகிய இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இரண்டு தினங்களுக்கு 80 விண்ணப்பங்கள் பெறுவதற்கு ஆன்லைனில் சமர்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

RPO Mobile Van Madurai

இந்த சேவைக்கு முன் அனுமதி பெற பாஸ்போர்ட் சேவை (Passport Seva https://www.passportindia.gov.<wbr />in/) என்ற இணையத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவு செய்து "RPO Mobile Van Madurai” என்பதை தேர்வு செய்ய வேண்டும். பாஸ்போர்டுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் மற்றும் அழகர்கோயில் அருகில் வசிக்கும் பொதுமக்களும் மேலும் அருகிலுள்ள கல்லுாரியில் பயிலும் மாணாக்கர்களும் இந்த வசதியினைப் பயன்படுத்திக் கொள்ள மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article