அதிகாரிகளுக்கும் - ஆட்சியாளர்களுக்கும் லஞ்சம்

புதிய மின் இணைப்பு வழங்குவது , மின் சாதன பழுதை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, மீட்டர், மின் கம்பி, டிரான்ஸ்பார்மர், கேபிள் உள்ளிட்ட, பல மின் சாதனங்கள் , தனியார் நிறுவனங்களிடம் இருந்து 'டெண்டர்' கோரி வாங்கப்படுகின்றன.

சரிபார்ப்பு குழு டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், தங்களுக்குள் கூட்டணி அமைத்து கொண்டு, அதிக விலைப் புள்ளி வழங்குகின்றன. இதனால் பயனடையும் நிறுவனங்கள், அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் லஞ்சம் தருகின்றன.

3 குழுக்கள் நியமனம்

அதிக விலைக்கு சாதனங்கள் வாங்கப்படுவதால் , மின் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க, சந்தை பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு சரிபார்ப்பு குழு, உற்பத்தியாளர் மதிப்பீட்டு குழு, சரிபார்ப்பு குழு என, மூன்று குழுக்களை நியமிக்குமாறு 45 மின் பகிர்மான வட்ட மேற் பார்வை பொறியாளர்கள், 12 மண்டல தலைமை பொறியாளர்களுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு குழுவிலும் தொழில் நுட்பத்தில் அனுபவம் உள்ள பொறியாளர்கள், கணக்கு பிரிவு பணியாளர்கள் உட்பட குறைந்தது, தலா மூன்று பேர் இருப்பர். சந்தை பகுப்பாய்வு மதிப்பீடு சரிபார்ப்பு குழு, ஒவ்வொரு சாதனத்திற்கான மூலப் பொருட்களின் விலைகள், நிறுவனங்கள் வாங்கும் விலைகளை பகுப்பாய்வு செய்து, விலையை தெரிந்து கொள்ள வேண்டும்.

விலைகளை ஒப்பிட வேண்டும்

ஆலோசனை உற்பத்தியாளர் மதிப்பீட்டு குழு, சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் ஆலோசித்து, விலைகளை தெரிந்து கொள்ள வேண்டும். சரிபார்ப்பு குழு, மேற்கண்ட இரு குழுக்களின் வாயிலாக கிடைத்த அடிப்படை விலை, முந்தைய கொள்முதலின் போது வாங்கப்பட்ட விலை, பிற மாநில மின் வாரியங்கள் வாங்கிய விலைகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

அதன் அடிப்படையில், ஒவ்வொரு சாதனத்திற்குமான அடிப்படை விலையை தெரிந்து, அதற்கு ஏற்ப டெண்டர் கோரி வாங்க வேண்டும். ஏழு நாட்கள் டெண்டர் தகவல் தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதில் இருந்து, சந்தை பகுப்பாய்வு மற்றும் உற்பத்தியாளர் குழு, 15 நாட்களுக்குள்ளும், சரிபார்ப்பு குழு ஏழு நாட்களுக்குள்ளும் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

இதன் வாயிலாக, எந்த சாதனம் வாங்குவதாக இருந்தாலும், அதன் அடிப்படை விலை தெரிய வரும். இதனால், அதிக விலைக்கு வாங்குவது தடுக்கப்படும். பொறியாளர்கள், அதிகாரிகள் குழுவில் இருப்பதால், என்ன விலைக்கு வாங்கினாலும் தாங்களே பொறுப்பு என்பதால் தவறு செய்வது குறையும். நாளைக்குள் இந்த குழுக்களை அமைத்து அதன் விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.