கடந்த பொங்கலுக்கு வெளியான தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ஜீவாவுக்கு நல்ல கம்பேக் படமாக அமைந்த நிலையில் அடுத்தபடியாக படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தெரிவித்துள்ளார்

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணை தயாரிப்பில் நடிகர் ஜீவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'தலைவர் தம்பி தலைமையில்' . இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பப்லு அஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக உருவான இப்படம் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது

ஜீவாவுக்கு கம்பேக்

இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய இரு படங்களை ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்த்தனர். ஆனால் விஜயின் ஜனநாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரம் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படமும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இப்படியான சூழலில் கார்த்தி நடித்த வா வாத்தியார் மற்றும் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் ஆகிய இரு படங்கள் ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகின. வா வாத்தியார் படம் நெகட்டிவ் விமர்சனங்களைப் பெறவே ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ரசிகர்களின் ஒரே சாய்ஸாக மாறியது. எளிய கிராமத்து பின்னணியில் அமைந்த கதை , ஃபேமிலி ஆடியன்ஸ் ரசிக்கும் விதமான காமெடிகள் என ரசிகர்களுக்கு ஒரு நல்ல பண்டிகை நாள் படமாக அமைந்தது இப்படம். நீண்ட நாட்களுக்குப் பின் ஜீவாவுக்கும் ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்தது.

இந்தி ரீமேக்

தமிழில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தற்போது இப்படம் இந்தியிலும் ரீமேக் ஆக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தெரிவித்துள்ளார். இந்தியில் யார் யார் இப்படத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்தான தகவல்கள் இனி வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.