இந்தியாவில் சர்வதேச உருளைக்கிழங்கு மையம்.. விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்

5 months ago 5
ARTICLE AD

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் சர்வதேச உருளைக்கிழங்கு மையத்தின் தெற்காசிய பிராந்திய மையத்தை  அமைக்க வேண்டும் என்ற வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் பரிந்துரைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

விரைவில் சர்வதேச உருளைக்கிழங்கு மையம்:

உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உற்பத்தித்திறன், அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் மதிப்புக் கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, விவசாயிகளின் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரித்தல் ஆகியவை இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதையும் படிக்க: TNAU Rank List: வேளாண்மை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; காண்பது எப்படி? அடுத்தது என்ன?

இந்தியாவில் உள்ள உருளைக்கிழங்கு தொழில் பிரிவானது உற்பத்தி, பதப்படுத்துதல், பேக்கேஜிங், போக்குவரத்து, சந்தைப்படுத்தல், மதிப்புச் சங்கிலி போன்றவற்றில் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சாத்தியக் கூறுகளைக் கொண்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்:

எனவே, இந்தத் தொழில் பிரிவில் உள்ள மிகப்பெரிய ஆற்றலைப் பயன்படுத்தி ஆராயும் வகையில், உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் உள்ள சிங்னாவில் சர்வதேச உருளைக்கிழங்கு மையத்தின் தெற்காசிய பிராந்திய மையம் நிறுவப்பட உள்ளது.

#Cabinet approves establishment of International Potato Centre (CIP)’s South Asia Regional Centre at Singna, Agra, Uttar Pradesh.

India is the world's second-largest producer of potatoes, and Uttar Pradesh is the largest potato-producing state. International Potato Centre's… pic.twitter.com/p89Z0o3KlS
— Ministry of Information and Broadcasting (@MIB_India) June 25, 2025

தெற்காசிய பிராந்திய மையத்தால் உருவாக்கப்பட்ட அதிக மகசூல், ஊட்டச்சத்து மற்றும் பருவநிலையை எதிர்கொள்ளும் உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு வகைகள், உலகத்தரம் வாய்ந்த அறிவியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மூலம் இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசிய பிராந்தியத்திலும் உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு துறைகளின் நிலையான வளர்ச்சியை கணிசமாக துரிதப்படுத்தும்.

இதையும் படிக்க: Axiom 4 Launch: 7 முறை ஏமாற்றம், 8வது முயற்சியில் வெற்றி - சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் 2வது இந்தியர்

Read Entire Article