"இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர்" பா ரஞ்சித் குறித்து நடிகர் ஆர்யா
1 month ago 3
ARTICLE AD
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் வேட்டுவம்’ முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் கதையுலகத்தையும், அதன் பின்னணியில் இருக்கும் மோதல்களையும் அறிமுகப்படுத்தும் விதமாக இந்த முன்னோட்டம் அமைந்துள்ளது. இதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா, இப்படத்தில் தான் இணைந்த விதம் குறித்து பகிர்ந்த தகவல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியாவின் சிறந்த இயக்குநர் ரஞ்சித்
இயக்குநர் பா ரஞ்சித் குறித்து இயக்குநர் ஆர்யா  பேசுகையில் " என்னைப் பொறுத்தவரை இந்தியாவில் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் பா ரஞ்சித். ரஞ்சித் ஈகோ இல்லாத ஒரு இயக்குநர். வேட்டுவம் பா ரஞ்சித் இதுவரை இயக்கதில் ரொம்ப தனித்துவமான ஒரு படம்.  தங்கலான் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் அந்த படம்  சரியாக மக்களிடம் போய் சேரவில்லை என்பதை தெரிந்துகொண்டு இந்த படத்தை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் சொன்னார். அந்த ஈகோ இல்லாமல் தன்னை மாற்றிக்கொண்டு வேலை செய்வதற்கு ஹேட்ஸ் ஆஃப்" என்று கூறினார்.
ரூ25 கோடி டூ ரூ75 கோடி
வேட்டுவம் படத்திற்குள் தான் வந்தது குறித்து ஆர்யா பேசுகையில், “சிறிய படமாக 25 கோடி பட்ஜெட்டில் தொடங்கியது. ஆனால் இறுதியில் 75 கோடி பட்ஜெட்டில் மிகப்பெரிய படமாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் நான் இந்தப் படத்தில் இல்லை. ‘சர்பட்டா பரம்பரை 2’ படம் தொடர்பாக தினமும் ரஞ்சித்தை சந்திக்கச் செல்வேன். அப்போது 60 நாட்களில் ‘வேட்டுவம்’ என்ற சிறிய படத்தை எடுக்கப்போவதாக அவர் சொன்னார். ‘நானும் படத்தில் இருக்கிறேனா?’ என்று கேட்டேன். ‘இல்லடா, நீயெல்லாம் இல்லை’ என்றார்.
ஆர்யா வந்த பின்னணி
பின்னர் ஒரு நாள் அழைத்து, ‘வேட்டுவத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. நீ பண்ண வேண்டும்’ என்றார். கதை என்ன என்று கேட்டபோது, ‘கதை எல்லாம் உனக்கு சொல்ல முடியாது. கதை சொன்னால் நீ நடிக்க மாட்டாய். நீ ஷூட்டிங் வந்துரு’ என்று கூறினார்” என ஆர்யா தெரிவித்துள்ளார்.
‘வேட்டுவம்’ படத்தில் ஆர்யாவுடன் வி.ஆர்.தினேஷ், சோபிதா துலிபாலா, கலையரசன், மைம் கோபி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்ய, செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். திலீப் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளார்.
மேலும், பா.ரஞ்சித் மற்றும் ஆர்யா மீண்டும் இணையும் படம் என்பதும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முன்னதாக இருவரும் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் இணைந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read Entire Article