இந்தியாவின் சிறந்த நடிகர் இவர்தான் - செல்வராகவன் சொன்னது யாரை தெரியுமா..?

6 months ago 5
ARTICLE AD

லூசிபர் 2 படத்தின் வெற்றிக்கு பிறகு மோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியான துடரும் திரைப்படம் மலையாள திரையுலகில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் வகையில் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது. மேலும் ஒரே ஆண்டில் மோகன்லால் நடித்த இரண்டு படங்கள் 200 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது. முதன் முறையாக 100 கோடி வசூல் செய்த மலையாள திரைப்படம் மோகன்லால் நடித்த லூசிபர் தான். படம் ரிலீஸ் ஆன 8 நாட்களில் 100 கோடி வசூல் சாதனை படைத்தது. தற்போது மலையாள திரையுலகில் மோகன்லால் வசூல் சக்கரவர்த்தியாக மாறியுள்ளார்.

அதே கெமிஸ்ட்ரி அதே துள்ளல்

மோகன்லாலும் -ஷோபனாவும் இணைந்து நடிக்கும் 56ஆவது படமாக துடரும் இருக்கிறது. இந்த ஜோடிக்கான கெமிஸ்ட்ரி புத்துணர்ச்சியுடன் இருப்பது போலவே காண முடிகிறது. சென்னையில் சினிமா ஃபைட்டராக இருக்கும் ஃபென்ஸ் மோகன் ஒரு விபத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலகி கேரளாவில் கேப் டிரைவராக பணியாற்றி வருகிறார். சண்முகத்திற்கு ( மோகன்லால்) தனது அம்பாசிடர் கார் மீது அளவற்ற அன்பு வைத்துள்ளார். அவரது மனைவி லலிதா (ஷோபனா), இரண்டு பிள்ளைகள் இதுதான் அவரது உலகம். திடீரென ஒருநாள் போலீஸிடம் அவரது கார் மாட்டிக்கொள்கிறது. காரை மீட்க செல்லும் பென்ஸ் மோகனுக்கு போலீசால் ஒரு தொல்லை தொடர்கிறது. இதனைத்தொடர்ந்து தனது குடும்பத்தில் நடக்கும் பிரச்னை அதனை மோகன்லால் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.

குடும்பத்தை காக்க ரக்கடாக மாறிய மோகன்லால்

துடரும் திரைப்படம் மலையாளத்தில் மட்டும் அல்லாமல் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை பார்த்த ரசிகர்களும், திரை பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். தனது குடும்பத்திற்காக மோகன்லால் ரக்கட் பாயாக மாறிவிடுவதாகவும் தெரிவிக்கின்றனர். மோகன்லால் வருடத்திற்கு இரண்டு திரைப்படம் இப்படி ஒரு கதையில் நடித்தால் போதும் என ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. மேலும், இப்படத்தை பார்க்க மனம் பதைபதைக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

செல்வராகவன் பாராட்டு

திரையில் கிடைத்த வரவேற்பை தாண்டி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் துடரும் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது எக்ஸ் தளத்தில் வியந்து பாராட்டியுள்ளார். அதில், "மிகவும் பிரமாதமான திரைப்படம். இப்படத்தில் மோகன்லாலை தவிற வேறு யாராலும் நடித்திருக்க முடியாது. என்னமாதிரியான நடிகன் அவர். இந்தியாவில் சிறந்த நடிகர் மோகன்லால்" என புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

Read Entire Article