இந்தியன் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் பணி: 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!

2 weeks ago 2
ARTICLE AD

இந்தியன் வங்கியின் மதுரை மண்டல அலுவலகம் சார்பாக நகை மதிப்பீட்டாளர் (Jewel Appraiser) பணிக்கான ஆட்களைத் தேர்வு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. மதுரை,தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள வங்கிக் கிளைகளில் இந்தப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியன் வங்கியில் பணியாற்ற விரும்பும் 8 ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் நகை மதிப்பீட்டாளர் பயிற்சிச் சான்றிதழ் வைத்துள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி மற்றும் அனுபவம்: தங்க நகை மதிப்பீட்டாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், நகை மதிப்பீட்டாளர் பயிற்சிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது 30 முதல் 50 வரை இருக்க வேண்டும். 5 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 2 ஆண்டுகள் வரை சலுகை அளிக்கப்படும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: விண்ணப்பதாரர்கள், கல்விச் சான்றிதழ்கள், பயிற்சிச் சான்றிதழ், ஆதார், பான், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை மற்றும் காவல்துறை அளித்த தடையில்லாச் சான்றிதழ் (NOC) ஆகியவற்றின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மதுரை மண்டல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும். மின்னஞ்சல் மூலம் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

முக்கிய குறிப்புகள்: நகை மதிப்பீட்டாளர் பணிக்கு ஊதியம் கமிஷன் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.நகை மதிப்பீட்டாளர் பணியில் நிரந்தர வேலைவாய்ப்புக்கு உத்திரவாதம் இல்லை (கோர உரிமை இல்லை). நகை மதிப்பீட்டாளர் பணிக்கு எந்தப் பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்தத் தேர்வு நடைமுறையை எந்த நேரத்திலும் நிறுத்தி வைக்கும் அல்லது ரத்து செய்யும் முழு அதிகாரம் இந்தியன் வங்கி நிர்வாகத்திற்கு உள்ளது.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி12.12.2025 ஆகும். தொடர்புக்கு, மண்டல மேலாளர், இந்தியன் வங்கி, மதுரை.

Read Entire Article