திரையரங்கில் வெளியாகும் படங்கள் 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியாக வேண்டும் என திரையரங்க உரிமையாளர் சங்கம் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் இணைந்து தயாரிப்பாளர்களுக்கு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். இனிமேல் 8 வார ஓடிடி ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களின் படங்களையே தங்களது திரையரங்குகளில் வெளியிடுவதாக தமிழ் , தெலுங்கு , கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் கலந்தாலோசித்து முடிவெடுத்துள்ளார்கள். இதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் சுப்ரமணியம் அதிரடி அறிவிப்பு

அதற்கு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது "ஒரு படத்தை தயாரிக்கும் படத்தை எப்படி வெளியிட வேண்டும் என்பதற்கான முழு உரிமையை ஒரு தயாரிப்பாளருக்கு இருக்கு. அதே போல் ஒரு திரையரங்க உரிமையாளருக்கு எந்த படத்தை வெளியிட வேண்டும் என்று முடிவெடுக்க முழு உரிமையும் இருக்கிறது. அதனால் இனிமேல் 8 வாரங்களுக்கு பின்பே ஓடிடியில் வெளியாகும் படங்களை மட்டுமே என்னுடைய திரையரங்கத்தில் வெளியிடுவேன் என முடிவெடுத்துள்ளேன். " என்று கூறியுள்ளார். கோயம்பத்தூர் பகுதியில் அதிகளவிலான திரையரங்குகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் திருப்பூர் சுப்ரமணியம். அவரது இந்த முடிவு கோயம்புத்தூரில் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்களுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

தற்போதைய நிலைப்படி ஒரு படம் திரையரங்கில் வெளியான 4 ஆவது வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஒரு சில படங்கள் திரையரங்கில் நல்ல வெற்றிபெறும் நிலையில் அதன் ஓடிடி ரிலீஸ் கொஞ்சம் நீடிக்கப்படும் . 4 வாரத்தில் படங்கள் ஓடிடியில் வெளியாவதால் திரையரங்க உரிமையாளர்கள் ஒரு படத்தை 4 வாரத்திற்கு மேல் படங்களை திரையரங்கில் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் சில தயாரிப்பாளர்கள் நிர்பந்திக்கப்பட்டு அவர்களிடம் இருந்து திரைப்பட மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் கையெழுத்து பெறுவதாகவும். தயாரிப்பாளர் சங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்த தீர்மானத்தில் கையெழுத்திடுபவர்களின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பாக எந்த வித ஒத்துழைப்பும் வழங்கப்படாது என தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.