"இதை விட கேவலம் எதுவும் இல்லை" காமராஜர் சர்ச்சையில் கடுப்பான தமிழிசை

5 months ago 5
ARTICLE AD

கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய அவர், "பாஜக செய்யும் துரோகங்களை பேசுங்கள் என்று சொல்கிறார் திமுக தலைவர் சொல்கின்றார்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா?

திமுக எவ்வளவு துரோகங்களை செய்து இருக்கிறது. 2026 தேர்தல் வருகின்றது என்பதற்காக ஐந்து மாநகராட்சியைச் சார்ந்த கவுன்சிலர்கள் உடனே பதவி விலக வேண்டும் என்று முதல்வர் சொல்லி இருக்கிறார். இவ்வளவு நாள் இவர்கள் கொள்ளை அடித்ததை மக்கள் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்.

இப்பொழுது ஓட்டு வேண்டும் என்ற உடன் பதவி விலக சொல்கிறார். தமிழகத்தில் எதுவுமே ஒழுக்கமாக நடக்கவில்லை என்பது முதல்வர் வாயில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. மணல் கடத்தல் இருந்தது. தற்பொழுது ஜல்லி கடத்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாலத்தீவு போன்ற நாடுகளுக்கும் தற்போது மண் கடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இது வேதனையான ஒன்று.

சிறுநீரகங்களைக் கடத்த துவங்கி இருக்கிறார்கள். சிறுநீரக முறைகேடு நாமக்கல்லில் நடைபெற்று இருக்கிறது. வெளிநாட்டுனருக்கு நமது உறுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. திமுகவை சேர்ந்தவர் நடத்தும் மருத்துவமனையில் வெளிநாட்டவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.

விதிமுறைகளை தாண்டி உடல் உறுப்பு வெளிநாட்டவருக்கு வைக்கப்பட்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் பிரச்னை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஸ்டாலின் எல்லா இடங்களிலும் சென்று மக்களை சந்தித்து பேச சொல்லி இருக்கிறார்" என்றார்.

"இதை விட கேவலம் எதுவும் இல்லை"

காமராஜர் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதற்கு பதில் அளித்த தமிழிசை, "காமராஜர் மாபெரும் தலைவர். அவரை கொச்சைப்படுத்தி பேசியிருக்கின்றனர். தான் பேசியது தவறு என்று திருச்சி சிவா சொல்லவில்லை. குளிர்காய பல பேர் காத்திருக்கிறார்கள் என முதல்வர் சொல்கின்றார்.

காங்கிரஸ்காரர்கள் ஓட்டுக்காக இன்னும் திமுகவுடன் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதை விட கேவலம் எதுவும் இல்லை. காமராஜரை பற்றி சொல்வதற்கு எதுவுமே இல்லையா? அவரை ஏன் கடற்கரை அருகே அடக்கம் செய்யவிடவில்லை?

காமராஜர் எவ்வளவு பள்ளிகள் கட்டினார். அணைகள் கட்டினார். எவ்வளவு கல்வி நிறுவனங்கள் கட்டினார் என்பதை பற்றி சொல்வதில் என்ன பிரச்னை? பி.எச்.எல் நிறுவனத்தை போய் சிவா பார்க்க வேண்டும்" என்றார்.

கடுப்பில் பேசிய தமிழிசை!

அதிமுக உடனான கூட்டணி குறித்து பேசிய அவர், "கூட்டணி பற்றி டெல்லியில் உள்ள தலைவர்கள், பெரிய தலைவர்கள் பேசுவார்கள். நான் அதைப் பற்றிய கேள்விக்கு பதில் சொல்லவே மாட்டேன்" என்றார்.

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருக்கிறதா என்ற கேள்விக்கு, எந்த விரிசலும் இல்லை என பதில் அளித்த அவர், அண்ணன் எடப்பாடியார் தெளிவாக சொல்லிவிட்டார். திமுக கூட்டணி வைக்கும் போது மதவாத கட்சி இல்லையா என அவர் கேட்டிருந்தார்.

மற்ற மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கின்றது போல தமிழகத்திலும் நடக்கும்.
ஆட்சிக்கு வந்தவுடன் அதை சொல்லுவோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சி வந்தாலும் அது பிரமாண்டமான கட்சி" என்றார்.

Read Entire Article