இது உலக மகா உருட்டுடா சாமி...கிளாமர் காட்சிகளை நியாயப்படுத்திய சுந்தர் சி
8 months ago 5
ARTICLE AD
சுந்தர் சி இயக்கிய மதகஜராஜா திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்றது. அடுத்தபடியாக சுந்தர் சி இயக்கி வடிவேலு கூட்டணியில் நடித்துள்ள படம் கேங்கர்ஸ். சுந்தர் சி இயக்கி வடிவேலு நடித்த மருதமலை , வின்னர் ஆகிய படங்கள் மிகப்பெரிய காமெடி சரவெடிகளாக அமைந்த நிலையில் ம் மறுபடியும் இந்த கூட்டணிக்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி கேங்கர்ஸ் திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்திற்கான ப்ரோமோஷன்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்கள் வடிவேலு மற்றும் சுந்தர் சி. இப்படத்தின் ப்ரோமோஷ்ன் நிகச்சியின் போது சுந்தர் சியிடம் அவரது படங்களில் அதீத கிளாமர் காட்சிகள் இருப்பது குறித்து கேள்வி எழுப்பப் பட்டது. இதற்கு சுந்தர் சி கொடுத்த பதிலை வைத்து அவரை பலர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
கிளாமர் காட்சிகள் பற்றி சுந்தர் சி
" குழந்தைகள் மற்றும் ஃபேமிலி ஆடியன் தான் என்னுடைய டார்கெட் ஆடியன்ஸ். அப்படி இருக்கையில் என்னுடைய படங்களில் நான் வல்கரான காட்சிகளை பெரும்பாலும் தவிர்த்து விடுவேன். ஒரு படத்தின் கதையை எழுதும் போதே அதில் இரட்டை அர்த்த வசனங்களை தவிர்த்து விடுவேன். அப்படி ஏதாவது ஒரு இரட்டை அர்த்த டயலாக் படத்தில் இருந்தால் அது நமது பார்வையில் அப்படி இருக்கலாம். அதேபோல் நாம் வைக்கும் கேமரா ஆங்கிள் தான் முக்கியம் . புடவை கட்டி வந்தாலும் நீங்கள் டாப் ஆங்கிள் வைத்தால் அது ஆபாசமாக இருக்கும். நான் அப்படி வைக்க மட்டேன். முடிந்த அளவிற்கு அழகாக ஷூட் பண்ண நினைப்பேன். அதேபோல் புடவை கட்டியிருக்கும் நடிகையும் நடிகரும் கட்டிபிடித்து உருள்வது போல் நான் காட்சிகள் வைத்தது கிடையாது. என்னுடைய படத்தில் தனியாக ஐட்டம் சாங் என்று ஒன்று இருந்தது இல்லை.
Baradhwaj: Criticism about Glamour is high in your films❓
SundarC: I never kept wrong angle for Glamour song. No Double meaning dialogues, No special item number with other heroines, No Violent Blood scenes in the film, No sexual scenes etc.. pic.twitter.com/h0kjLjzLxA
— AmuthaBharathi (@CinemaWithAB) April 20, 2025
Read Entire Article