“இது ஆரம்பம் தான்” – அதிமுகவிற்கு ஜம்ப் ஆன தவெக இளைஞர்கள்

1 month ago 8
ARTICLE AD

கோவையில் தவெக (TVK) கட்சியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மேலும், தவெக கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் விரைவில் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக அணியில் பிளவு?

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமியின் தலைமையை ஏற்று அதிமுகவில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுண்டக்காமுத்தூர், ராமசெட்டிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட தவெக கட்சி இளைஞர்கள், இன்று கோவை சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது, அதிமுக தலைமையின் செயல்பாடுகள், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால அரசியல் நிலைப்பாடுகள் குறித்து விளக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அதிமுகவின் அணுகுமுறையும், தமிழக அரசியல் சூழலில் கழகத்தின் முக்கியத்துவமும், இளைஞர்களை கவர்ந்ததாக புதிதாக இணைந்தவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தவெக கட்சியைச் சேர்ந்த மேலும் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், வரும் நாட்களில் அதிமுகவில் இணைவதற்கான முடிவை எடுத்துள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கோவை மாவட்டத்தில் அதிமுகவின் இளைஞர் ஆதரவு மேலும் வலுப்பெறும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த இணைப்பு நிகழ்ச்சியில், சுண்டக்காமுத்தூர் பகுதி கழக செயலாளர் செல்வராஜ், ராமசெட்டிபாளையம் 89A வார்டு செயலாளர் நவீன் நடராஜ், கோவை தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read Entire Article