இணையத்தில் வைரலான காதலர்களின் அந்தரங்க வீடியோ...வாழ்க்கையை இழந்து நிற்கும் 19 வயது பெண்

1 week ago 2
ARTICLE AD

இளம் காதலர்களின் அந்தரங்க வீடியோ கசிந்து இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த வீடியோவில் சம்பந்த பெண் இதனால் பெரியளவில் சவால்களை சந்தித்து வருகிறார். ஒருபக்கம் அந்த பெண் தற்கொலை செய்துகொண்டதாக பரவி வரும் நிலையில் இன்னொரு பக்கம் இன்னொரு பெண் அந்த வீடியோவில் இருப்பது நான் தான். தயவு செய்து அந்த வீடியோவை பரப்ப வேண்டாம் என கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளது.

இணையத்தில் வைரலான 19 வயது பெண் வீடியோ

கடந்த வாரம் இணையத்தில் காதலர்களின் அந்தரங்க வீடியோ இணையத்தில் கசிந்தது. ஒரு சில நாட்களின் இந்த வீடியோ பல லட்சம் பேரால் பகிரப்பட்டு காட்டுத்தீப் போல் பரவியது. இந்த வீடியோவில் இருந்த பெண் யார் , அவரது சமூக வலைதள கணக்கு என எல்லாவற்றையும் இணையத்தில் தேடத்த் துவங்கினர். வீடியோவில் இருந்த அந்த பெண் நேபாளத்தைச் சேர்ந்தவர் அந்த ஆண் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்தவன் என தகவல்கள் வெளியானது. வீடியோவில் இருந்த பெண் ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம் என நினைத்து அவரை தாக்கத் தொடங்கினர் நெட்டிசன்கள். வீடியோவின் லிங் கேட்டு இன்னொரு கும்பல் அதிகரிக்கவே அதே வீடியோவை ஏஐ மூலம் எடிட் செய்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின.

பெண் தற்கொலை செய்துகொண்டாரா ?

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அந்த 19 வயது பெண் தற்கொலை செய்துகொண்டார் என்று மற்றொரு தகவல் பரவியது. ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என்று Fackcheck செய்துள்ளார்கள்.

கதறி அழும் பெண் வீடியோ

இன்று மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் வீடியோவில் இருக்கும் பெண்ணின் சாயலை ஒத்த ஒருவர் தயவு செய்து இந்த வீடியோவை டெலிட் செய்துவிடுங்கள் இதனால் தனது வாழ்க்கை நரகமாகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இரண்டு தனிப்பட்ட நபர்களின் வீடியோவை எந்த வித தயக்கமும் இல்லாமல் பகிர்கிறார்கள். அந்த வீடியோவைப் பார்த்து அது பெண் விருப்பத்துடன் நடந்ததா இல்லையா என்பதை விவாதிக்கிறார்கள். சம்பந்த நபர்களை வைத்து போலியான வீடியோக்கள் , மீம்கள் உருவாக்குகிறார்கள். அவர்களின் சமூக வலைதள கணக்கை கண்டுபிடித்து அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நாசமாக்குகிறார். போதாத குறைக்கு வீடியோவை பார்த்துவிட்டு இது தேவையா என கருத்தும் சொல்கிறார்கள். இதில் சம்பந்தபட்ட அந்த இருவரில் அந்த பெண் மிகப்பெரிய சமூக அழுத்தத்திற்கு உள்ளாவார் என்பதை எந்த சிந்தனையும் இணையவாசிகளுக்கு இருப்பதில்லை.

Read Entire Article