ஆவணி மாதத்தில் நிச்சயம் இதை செய்யுங்கள்!!!

ஆவணி மாதம் சூரியன் ஆட்சி பெற்று பூமி எங்கும் கதிர்களோடு ஒளி வீசிக்கொண்டிருக்கும் மாதம் சூரியன் இல்லை என்றால் பூமியில் உயிர்கள் செழித்திருக்க வாய்ப்பில்லை என்கிறது அறிவியல்…. இப்படியான ஆவணி மாதத்தில் சூரியன் தனது சொந்த ஆட்சி வீடான சிம்மத்தில் அமர்ந்து முழு பலத்தோடு வளம் வருகிறார்…. நமக்கு முன்னோர்கள் இதுபோன்ற கர்மாக்களை விட்டு விட்டு சென்றார்களோ அந்த கர்மாக்களின் அடிப்படையில் நாம் பிறந்து நல்லவை கெட்டவைகளை அனுபவித்து வருகிறோம்….

உங்களுக்கு சாபம் இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது?

முன்னோர்களின் சாபம் யாருக்கேனும் இருந்தாலோ அல்லது வீட்டில் தாத்தா, கொள்ளு தாத்தா, தந்தை போன்றோரின் சாபங்கள் இருந்தாலும் இந்த ஆவணி மாதத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம்…. இப்படியான சாபம் உள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியத்தில் பிரச்சனை, திருமண தடங்கல், வீடு கட்டி முடிக்க முடியாமல் போவது, விவாகரத்து, வம்பு வழக்கு, நல்ல வேலை இல்லாமல் அவதிப்படுவது, பொருளாதார நஷ்டம் போன்றவற்றை சந்திக்க நேரிடும்….

ஆவணி ஒன்று தொடங்கி அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் உங்களுக்கான நல்ல நேரம் ஆரம்பமாகிவிட்டது ஒவ்வொரு நாளிலும் இருக்கின்ற அனைத்து சிவன் கோவில்களுக்கும் சென்று மனதார வழிபடுங்கள், சிவனுடைய பாடல்களை கேளுங்கள், சிவபெருமான் குறித்து கதைகளை கேளுங்கள்… நம்மையெல்லாம் ஆட்டுவிக்கின்ற பரம்பொருள் பரமேஸ்வரன் அந்த சர்வேஸ்வரனின் அருளை பெற்றால் ஒழிய முன்னோர்களின் சாபம் நீங்குவது கடினம்….

எதற்காக நாம் சிவபெருமானை வணங்க வேண்டும் ஆதி கடவுள் ஆன சிவனே ஜாதகத்தில் சூரியன் ஆக விளங்குகிறார்… முன்னோர்களின் சாபத்திற்கும் சூரியனுக்கும் தான் தொடர்பு உண்டு சூரியன் தான் உங்களின் மூலாதாரம்… நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பதை காட்டுவதும் சூரியன் தான் அப்படிப்பட்ட சூரியனின் அதி தேவதையான சிவபெருமான் தான் இந்த உலகை ஆளும் ஆதி சிவன்…. ஆகஸ்ட் 17ஆம் தேதியே உங்களின் பக்தியை சாபம் நீங்க சிவன் மீது செலுத்தி விடுங்கள்…. வானத்தில் சூரியனுடன் கேது சஞ்சாரம் செய்யப் போகிறார் அப்படி என்றால் ஏதோ ஒரு முன்னோர் தடை நிச்சயமாக உங்களுக்கு இருக்கத்தான் செய்கிறது ஆனாலும் கவலை வேண்டாம் சிவனை வழிபடுவதற்கு முன்பாக விநாயகரை வழிபட்டு விட்டு பிறகு சிவனிடம் செல்லுங்கள்…

சங்கடங்களை தீர்க்கும் விநாயகர்!!!

சிம்மத்தில் கேது சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் சூரியனும் இணையப் போகிறார் எது உங்களுக்கு கிடைக்கவில்லையோ எது தடங்கலாக இருந்தது எந்த விஷயத்தில் நீங்கள் பெரும் நஷ்டத்தை கஷ்டத்தை அனுபவித்தீர்களோ அந்த விஷயம் விநாயகர் மூலமாக நிவர்த்தியாக போகிறது அதற்கான பாதை தற்போது தெரியப்போகிறது பிரம்மாண்ட வெற்றிகளை பெறப் போகிறீர்கள்… விநாயகருக்கு ஆவணி ஒன்று முதலே விளக்கு போடுவதோ மனதார பூஜிப்பதோ அருகில் இருக்கக்கூடிய விநாயகர் சந்திக்கு சென்று வணங்குவதோ ஆரம்பித்து விடுங்கள் விநாயகரை வணங்கி விட்டு சிவபெருமானையும் வணங்குங்கள் முன்னோர் சாபத்திலிருந்து நீங்கள் விடுபட்டு நல்ல வளமான வாழ்வு பொருளாதார முன்னேற்றம் திருமண தடைகள் விளங்குவது குழந்தை பாக்கியம் வீடு கட்டுவது நிலங்கள் வாங்குவது பேர் புகழ் கிடைப்பது போன்றவை சாதாரணமாக உங்களை வந்து சேரும்…