நடிகை ஆர்த்தி ரவியின் இடைக்கால ஜீவனாம்சம் கோரிக்கையில் இரண்டு வாரத்திற்குள் குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தவிட்டிருந்தது. தீர்ப்பளிக்க குடும்ப நல நீதிமன்றத்திற்கு கொடுக்கபட்ட காலக்கெடுவை நீட்டிகும் படி நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்திருந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவியின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. தனது விவாகரத்தை அறிவித்ததில் இருந்து ரவி மோகன் தனது குழந்தைகளை பிரிந்து தனியாக வாடகை வீட்டில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். தான் சம்பாதித்த அனைத்தையும் தனது மனைவியிடமே கொடுத்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதே நேரம் விவாகரத்திற்கு பின் ரவி மோகன் தனக்கும் தனது குழந்தைகளுக்காகவும் மாதம் ரூ 40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி கோரிக்கை வைத்திருந்தார்.

குழந்தைகளுக்கு பீஸ் கட்ட பணம் தரவில்லை

அண்மையில் , ரவி மோகன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தனது மகன்களின் பள்ளி கட்டனத்திற்கான ஜீவனாம்சத்தை வழங்கவில்லை அதனை வழங்க கோரி ஆர்த்தி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் எடுத்துக்கொள்ளாத நிலையில் இந்த மனுவில் விரைந்து தீர்ப்பளிக்க உத்தரவிடுமாறு உயர்நீதி மன்றத்தை நாடினார். ஆர்த்தியின் இடைக்கால ஜீவனாம்சம் வழங்க கோரிய மனுவை இரண்டு வாரத்திற்கு விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகன் இந்த ஜீவனாம்ச கோரிக்கை மனுவை விசாரிக்க அளிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் . இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்தூல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது . ஆர்த்தி ரவி தரப்பில் வழக்கறிஞர் ஜெ ரவீந்திரன் ஆஜராகி காலக்கெடுவை நீட்டிக்க கூடாது என வாதிட்டார். இதனைத் தொடர்ந்து காலக்கெடுவை நீட்டிக்க கோரிய ரவி மோகனை தள்ளுபடி செய்ததோடு குடும்ப நல நீதிமன்றத்தில் உள்ள விவாகரத்து விசாரணையை எதிர்கொள்ளும்படி உத்தரவிட்டார்.

ஆர்த்தி பக்கம் சாயும் விவாகரத்து வழக்கு

விவாகரத்து தொடர்பாக ஆர்த்தி ரவி மற்றும் ரவி மோகன் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்கள். சமீபத்தில் ரவி மோகன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து தனது கஷ்டங்களை பகிர்ந்துகொண்டார். ஆர்த்தி தன்னை மிரட்டி திருமணம் செய்துகொண்டதாகவும் , தான் சம்பாதித்த அனைத்தையும் தனது மனைவியிடம் கொடுத்துவிட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் தனது மகன்களை சந்திக்க விடாதபடி ஆர்த்தி அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ரவி மோகனுக்கு ரசிகர்களிடம் பரவலாக ஆதரவு இருந்தாலும் விவாகரத்து வழக்கு தற்போதைய நிலைக்கு ஆர்த்தி ரவிக்கு சாதகமாகவே இருந்து வருகிறது.