இந்திய இரு சக்கர வாகன சந்தையில் ஸ்கூட்டர்கள் எப்போதும் மிகவும் பிரபலமாக உள்ளன. கிளட்ச் அல்லது கியர் தேவையில்லாமல், எளிதான இந்த ஸ்கூட்டர்களை இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் விரும்புகின்றனர்.

அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் அதிக விற்பனையான ஸ்கூட்டர்களில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, இந்த முறையும், ஸ்கூட்டர் சந்தையில் கடுமையான போட்டி நிலவியது. ஒவ்வொரு ஸ்கூட்டரின் விற்பனை புள்ளிவிவரங்களையும், எந்த மாடல் பொதுமக்களுக்கு மிகவும் பிடித்தமானது என்பதையும் பார்ப்போம்.

ஆக்டிவா மற்றும் ஜூபிடர்

ஹோண்டா ஆக்டிவா மீண்டும் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டு, அக்டோபர் 2025 இல் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக உருவெடுத்தது. இந்த மாதம் 3,26,551 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன, இது கடந்த ஆண்டை விட 22.39% அதிகமாகும்.

மொத்த ஸ்கூட்டர் விற்பனையில் இதன் பங்கு 44.29% ஆகும். டிவிஎஸ் ஜூபிடர் 1,18,888 யூனிட்கள் விற்பனையுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. இது கடந்த ஆண்டை விட 8.37% அதிகரித்து, 16.13% சந்தைப் பங்கை அடைந்துள்ளது.

குறைந்த அக்சஸ் விற்பனை

சுஸுகி அக்சஸ் மூன்றாவது இடத்தில் நீடித்தாலும், ஆனால் அக்டோபரில் விற்பனை குறைந்தது. அக்டோபர் 2025 இல் 70,327 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டன, இது முந்தைய ஆண்டு விற்பனையான 74,813 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது 6% சரிவு. இதற்கிடையில், டிவிஎஸ் என்டார்க் நல்ல விற்பனையாகி உள்ளது, இது 41,718 யூனிட்டுகளின் விற்பனையுடன் நான்காவது இடத்தைப் பிடித்தது, விற்பனையில் 4.13% அதிகரித்துள்ளது. ஹோண்டா டியோவும் இந்த மாதம் வளர்ச்சியைக் காட்டியது, 36,340 யூனிட்டுகள் விற்பனையுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது, இது விற்பனையில் 9.53% அதிகரிப்பு.

சேடக் மற்றும் ஐக்யூப்

அக்டோபரில் பஜாஜ் சேடக்கின் விற்பனை அதிகமாக இருந்தது, 34,900 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 13.89% அதிகமாகும். TVS iQube 31,989 யூனிட்களை விற்பனை செய்து, 10.60% அதிகமாகும். இரண்டு ஸ்கூட்டர்களும் EV பிரிவில் வலுவான இருப்பை வெளிப்படுத்தின.

வளர்ச்சியை அடைந்த மற்ற ஸ்கூட்டர்கள்:

சுஸுகி பர்க்மேன் 27,058 யூனிட்கள் விற்பனையுடன் எட்டாவது இடத்தைப் பிடித்தது, இது 32.13% குறிப்பிடத்தக்க அதிகரிப்பு. ஹீரோ டெஸ்டினி 125 ஒன்பதாவது இடத்தைப் பிடித்தது, இதன் விற்பனை 26,754 யூனிட்களை எட்டியது, இது 83.93% சாதனை அதிகரிப்பு. யமஹா ரேஇசட்ஆர் 22,738 யூனிட்களை விற்பனை செய்து சிறப்பாக செயல்பட்டது, கடந்த ஆண்டை விட 23.23% வளர்ச்சியை அடைந்தது.