ஆடிப்பூரத்தை முன்னிட்டு உழவர் சந்தை ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஒரு லட்சம் வளையலால் வாராஹி அம்மன் மற்றும் ஆலயம் முழுவதும் அலங்காரம்.

ஆடிப்பூரத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வளையல் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம் உழவர் சந்தை அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சுவாமி வாராஹி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,தேன் நெய்,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், அபிஷேகப் பொடி, குங்கும், பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற

அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் மற்றும் ஆலயம் முழுவதும் ஒரு லட்சம் வலையினால் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் வாராஹி அம்மனுக்கு உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடிப்பூர சிறப்பு வலையில் அலங்கார நிகழ்ச்சியை காண கருர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் ஏற்பாட்டை ஆன்மீக ஸ்ரீ வாராகி அம்மன் ஆலய சிவாச்சாரியார் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்தனர்.

ஆடிப்பூரத்தை முன்னிட்டு தாந்தோணி ஆதி மாரியம்மன் ஆலயத்தில் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் வளையல் அலங்காரம்.

ஆடிப்பூரத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம் தாந்தோணி ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆதி மாரியம்மன் க்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அதன் தொடர்ச்சியாக மூலவர் ஆதி மாரியம்மனுக்கு

எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், அபிஷேகபெடி, அரிசி மாவு, பன்னீர்,விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆதி மாரியம்மனுக்கு பட்டாடை உடுத்தி வண்ண மாலைகள் அணிவித்து பின்னர் சந்தன காப்பு மற்றும் வளையல் அலங்காரத்தால் ஆதி மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதை தொடர்ந்து ஆலயத்தின் பூசாரி ஆதி மாரியம்மனுக்கு மகா தீபாராதனை காட்டிய பிறகு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை தாந்தோணி ஆதி மாரியம்மன் குடித்தெரு ஊர் பொதுமக்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.