<p>ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதமான பாலியல் குற்றம் நிரூபணமானால் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, பள்ளிகளில், பாலியல் புகார் வந்தால் உடனே தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும். நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் என 238 பேர் கொண்ட பட்டியலைத் தயார் செய்து, அவர்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தி உள்ளார்.</p>