நீலகிரி அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள 77 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஐ.டி.ஐ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணீடாதீங்க.

நீலகிரி மாவட்டம் அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலையில் (Cordite Factory) ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 77 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வரும் 10.09.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

மத்திய அரசு நிறுவனமான கார்டைட் ஃபேக்டரியில் சி.பி.டபுள்யூ (CPW) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 77

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். (AOCP [Attendant Operator (Chemical Plant)], Turner, IMCP [Instrument Mechanic (Chemical Plant)], Sheet Metal Worker, MMCP [Maintenance Mechanic (Chemical Plant)], Electrician, LACP [Laboratory Assistant (Chemical Plant)], Electronic Mechanic, PPO [Plastic Processing Operator], Boiler Attendant, Fitter General, Mechanic Industrial Electronics, Machinist, Refrigeration and Air Conditioning Mechanic)

வயதுத் தகுதி: 10.09.2025 அன்று 18 முதல் 40 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: ரூ. 19,900

இந்தப் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ டிரேடு படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் செய்முறைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cordite.co.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: பொது மேலாளர், கார்டைட் தொழிற்சாலை, அருவங்காடு, நீலகிரி மாவட்டம். தமிழ்நாடு பின் - 643 202. (The General Manager, Cordite Factory, Aruvankadu, The Nilgiris District. Tamilnadu Pin - 643 202.)

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.09.2025. கால தாமதம் செய்யாமல் உடனே விண்ணப்பித்து பயன் அடையுங்கள்.