மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. இது , தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு , திமுக , அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசை கடுமையாக கண்டித்தன.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கட்டுமான அறிவுப்புகளை வெளியிட்டார்.

மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடலூர் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பின் போது மாணவிகளிடம் உரையாடினார். pic.twitter.com/LxHjnGIQR3

— CMOTamilNadu (@CMOTamilnadu) February 21, 2025

அப்போது பேசுகையில், “ சமூக நீதியை சிதைக்கவே தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் , நமது பிள்ளைகளை தடுக்க நினைக்கிறார்கள். மாநில அரசின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படும் அரசாக், தடுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் வாங்கி கொண்டிருக்கும் வரியை தர முடியாது என கூற ஒரு நொடி போதும். தேன்கூட்டில் கல் எறியாதீர்கள்.