அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி

1 year ago 7
ARTICLE AD

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் புதிய கட்டிடம் கட்டி மாநகராட்சியாக இருந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றுடன் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி புதிய கட்டிடத்தில் மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி மேயர் மாநகராட்சி, துணை மேயர் உள்ளிட்ட நபர்களுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு அதை தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் நடத்த பிரம்மாண்ட அறை கட்டப்பட்டு அதன் தொடர்ச்சியாக அந்த அறையில் மாதம் தோறும் சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த மாதத்திற்கான சாதாரண கூட்டம் மற்றும் அவசர கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அதைத் தொடர்ந்து மேயர், துணை மேயர், ஆணையர் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். திருக்குறளுடன் தொடங்கப்பட்ட இந்த கூட்டத்தை மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது வார்டு பகுதியில் நடைபெற்று வரும் சிறு சிறு பிரச்சனைகளை எடுத்து கூறினர்.

அதிலும் குறிப்பாக குப்பை வாங்குவது இல்லை எனவும், சாக்கடை அல்ல துப்புரவு பணியாக வருவதில்லை எனவும், மின்விளக்குகள் கேட்டு நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை செய்து தரப்படவில்லை எனவும், 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எனவும், திமுக மாமன்ற உறுப்பினர்களும், அதிமுக மாமன்ற உறுப்பினர்களும் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

அனைத்து கேள்விக்கும் பதில் அளித்த மாநகராட்சியின் மேயர் கவிதா தொடர்ந்து மாநகராட்சியின் ஆணையர் பக்கம் தங்களது கேள்வி மேயர் திருப்பினார். அப்பொழுது அனைத்து பணிகளும் நடைபெறும் எனவும் குறிப்பாக ஆள் பற்றாக்குறை, பட்ஜெட் பற்றாக்குறைக்கும் இருப்பதால் இதனை சரி செய்யும் பணியில் முழு வீட்டில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் இந்த செயலால் மாநகராட்சி முடங்கிப் போய் இருப்பதாகவும், தமிழக அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக அதிகாரிகள் செய்யப்பட்டு வருவதாக மாநகராட்சி கூட்டத்திலேயே பகீர் குண்டை போட்ட மேயர் அதைத் தொடர்ந்து மண்டல தலைவர்களும் தங்கள் கோரிக்கையை முன் வைத்தனர்.

ஒட்டுமொத்தமாக மாநகராட்சி செயல்படவில்லை எனவும் தனது மனக்குமுறலை மேயர் முன் வைத்தார். மேலும் மாநகராட்சி கூட்டத்தில் மேயர் உள்ளிட்ட மக்கள் பிரதிகளுக்கு மாநகராட்சி அலுவலர்களும் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றச்சாட்டையும் முன் வைத்தனர். மேலும் இந்த மாநகராட்சி சாதாரண மற்றும் மாமன்ற அவசரக் கூட்டத்தை படப்பிடிப்பு செய்து கொண்டிருந்த செய்தியாளர்களை வெளியே தள்ளிவிட்டு மீண்டும் கூட்டத்தை நடத்தினர்.

மாநகராட்சி கூட்டத்தில் செய்தி சேகரிக்க பல்வேறு மாநகராட்சியில் தனி இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் கரூர் மாநகராட்சியில் செய்தியாளருக்கென தனி இருக்கையும் இல்லை செய்தியாளருக்கு உரிய முக்கியத்துவம் தருவதில்லை என செய்தியாளர் புலம்பியப்படியே வெளியேறினர்.

கரூர் மாநகராட்சியில் ஆணையர் எத்தன போக்கால் பல்வேறு பணிகள் தேங்கி கிடக்கின்றன என்பதை ஒட்டுமொத்த குற்றச்சாட்டாக உள்ளது. உடனடியாக தமிழக முதல்வர் மற்றும் மாநகராட்சி துறை அமைச்சர் மற்றும் முப்பெரும் துறை அமைச்சர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கரூர் வாசிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read Entire Article