ஓமலூர் அருகே காடையாம்பட்டி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, கட்சி நிர்வாகிகள் அரசுப் பள்ளியில் அறிமுகப்படுத்தி, பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளனர். அரசியல் கட்சி கொண்டாட்டம், அரசு பள்ளியில் நடைபெற்றது ஓமலூரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கட்சி கொடி ஏற்றி வைத்து, கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி கொடியுடன் சென்று பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், கட்சியின் கொடியை கையில் எந்தியபடி பல்வேறு இடங்களுக்கும் சென்று இனிப்புகள் வழங்கியும், மூத்தோர்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும், தமிழக வெற்றி கழகத்தின் ஓமலூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் பெருமாள் தலைமையில், காடையாம்பட்டி தாலுகா ராக்கிபட்டி அரசு துவக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவற்றிற்குள், கட்சி கொடியுடன் உள்ளே புகுந்து, கொடியை போர்டு பகுதியில் பிடித்து கொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். மேலும், அங்கன்வாடி மையத்திற்குள்ளும் சென்று குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினர்.

தொடர்ந்து தொகுதி முழுக்க கொடியை காட்டி மக்களுக்கு அறிமுகம் செய்தபடி, கட்சி நிர்வாகிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனிடையே, அரசியல் கட்சியின் கொடி அறிமுகம் செய்ததை, அரசு பள்ளியில் கொண்டாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.