விழுப்புரம் : அரசியலுக்கு வரவேண்டுமென்று சரியான இடத்திலிருந்து அழைப்பு வந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்றும் செல்போனில் டெக்னாலஜி என்ற பெயரில் வளர்ச்சி இருப்பதாகவும் தேவையில்லாதது இருப்பதால் மாணவர்கள் கல்வியும் மனரீதியான பாதிப்பு ஏற்படுவதாக நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் அருகேயுள்ள அரசமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி 12 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பீரோ ஒன்றினை வழங்கி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து பேட்டியளித்த நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி தன்னுடைய சக்திக்குட்பட்டு அரசு பள்ளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்து வருவதாகவும், அரசு பள்ளிகளை ஏளமானக யாரும் கருதகூடாது அரசு பள்ளியில் திறமையான ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சிறப்பாக கல்வி புகட்டுவதாகவும், இதனால் அரசு பள்ளிகள் முதன்மையானவையாக இருப்பதால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவிப்பதாக கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் மாணவர்கள் எந்த பள்ளியில் கல்வி பயிலுகிறோம் என்று பார்க்க கூடாது படித்த பள்ளியிலிருந்து எவ்வாறு வெளியே வருகிறோம் என மாணவர்கள் கருத வேண்டும் என்றும் மாணவர்கள் செல்போனை எவ்வாறு தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டுமென்று ஆசிரியர்களும், பெற்றோர்களும் சொல்லி தர வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். செல்போனில் டெக்னாலஜி என்ற பெயரில் வளர்ச்சியும் இருப்பதாகவும் தேவையில்லாதது இருப்பதால் கல்வி பாதிக்கபடுவதோடு மனரீதியான பாதிப்பிற்கு மாணவர்கள் உள்ளதாக கூறியுள்ளார்.

அரசியலுக்கு வரவேண்டுமென்று சரியான இடத்திலிருந்து அழைப்பு வந்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என தெரிவித்தார். விஜய் அரசியலுக்கு வந்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த தாடி பாலாஜி ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் மாற்றத்தை எதிர்பாப்பதாகவும் முழுமையாக விஜய் அரசியலுக்கு வந்தபிறகு பார்க்கலாம் என்றும் உடல் நிலை சரியில்லை என்றாலும் ஓடி ஓடி முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் பணி செய்துவருவதாகவும் மக்கள் உதவி கேட்டால் நான் செய்வேன் என நடிகர் பாலாஜி தெரிவித்துள்ளார்.