பெண்கள் குறித்து இழிவாக பேசியதற்காக அமைச்சர் பொன்முடியை கண்டித்து அதிமுக மகளிர் அணியினர் சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, வளர்மதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஏராளமான அதிமுகவினர் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பெண்கள் குறித்து இழிவாக பேசியதற்காக அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடி விலகக் கோரி முழக்கம் எழுப்பப்பட்டது.