<p>அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டப்பட்டவர் என்றும் அதனை ஆளுநர் மீற முடியாது என்றும் சென்னை உயர் நீதின்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் சென்னை உயர் நீதிமன்றம், இந்த கருத்தை தெரிவித்துள்ளது. </p>
<p>தன்னை முன்கூட்டியே விடுவிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துவிட்டார் என்றும் எனவே, உடனடியாக விடுவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி வீரபாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். </p>
<p>இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டப்பட்டவர் என கூறி, மனுவை மீண்டும் பரிசீலிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.</p>