அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ: 5 பேர் பலி!

11 months ago 7
ARTICLE AD

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடற்கரை பகுதியில் இந்த காட்டுத்தீ முதலில் பரவ ஆரம்பித்திருக்கிறது. கடற்கரை பகுதிகளில் காற்று வேகமாக வீசுவதால் காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவி வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறை, மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணிக்கும் பணியிலும் மீட்பு நடவடிக்கையிலும்  ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுத்தீ வீடுகளுக்குள்ளும் பரவி கட்டிடங்கள் தீக்கிரையாகி வருகின்றன. இதனால் சுமார் 10ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசம் ஆகியுள்ளன. மேலும், சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த காட்டுத்தீயால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீக்கு 5 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read Entire Article