அமித்ஷா-வை 'அவதூறு ஷா' என விமர்சித்த ஸ்டாலின்! திண்டுக்கல் மக்களுக்கு 8 அதிரடி அறிவிப்புகள்!

3 months ago 8
ARTICLE AD

திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காவேரி கூட்டு குடிநீர் திட்டம், விலையில்லா வீட்டு மனை பட்டா உட்ப ரூபாய். 1549.90 கோடியிலான பல்வேறு நலத்திட்ட  பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "  மத்திய அமைச்சர் அமித்ஷா  தமிழ்நாட்டிற்கு வந்தார். அவர் பேசும் போது தமிழ்நாடு அரசு இந்து சமய வழிபாடுகளுக்கு முடிவுகட்டும் வகையில் செயல்படுகிறது என்கிறார்.

அவர் 'அமித்ஷாவா அல்லது அவதூறுஷாவா' என்று சந்தேகம் வருகிறது. அந்தளவிற்கு உண்மைக்கு புறம்பான விஷயங்களை பேசிவிட்டு சென்றிருக்கிறார் அமித்ஷா. இதற்காக  அவருக்கு கடுமையான கண்டனங்கள். திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது வரை தமிழ்நாட்டில் 4000 கோவில்களில் கும்பாபிஷேகம் செய்திருக்கிறோம். இப்படி ஒரு சாதனையை பாஜக ஆள்கிற மாநிலங்களில் செய்திருக்கிறீர்ளா? கண்டிப்பாக இருக்காது. 9997 கோவில்களில் 771 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்டிருக்கிறோம். உண்மையான பக்தர்களை அரசை பாராட்டுகிறார்கள். தலைமை செயலகத்தில் வாரம் இரு முறை இந்து சமய பணிகளை தொடங்கி வைக்கிறேன். அனைத்து சமயத்தவர்கள் நம்பிக்களையும் மதிப்பளிக்கிறோம்.

இப்படி இருக்கும் போது துளியும் உண்மையில்லாத குற்றச்சாட்டை  மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுவது அவருடைய பதவிக்கு கண்ணியமல்ல. அதோடு தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா? என அமித்ஷா கேட்கிறார் அதையே தான் நாங்களும் சொல்கிறோம். தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? அல்லது டெல்லியிலிருந்து வேறு யரோ ஒருவர் ஆள வேண்டுமா? என முடிவு செய்யும் தேர்தல்  இது.  இது தமிழ்நாட்டு மக்களுக்கு விடப்பட்ட சுயமரியாதைக்கான சவால். பாஜகவை ஆட்சியில் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி பாடுபடுகிறார்.  என்றார்.  தமிழ்நாட்டில் கடந்த மூன்று தேர்தல்களிலும் படு தோல்வியடைந்தும் உங்களுக்கு புரியவில்லையா. தமிழ்நாட்டிற்கு ஓரவச்ஞ்சனை செய்வதை நீங்கள் மாற்றி கொள்ளாத போது மக்களும் மாற்றி கொள்ள மாட்டார்கள். திரும்பவும் நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம்" என்றார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் உரையாற்றிய முதல்வர், திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவைகள் பின்வருவன,

1. திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில், சாலை, தெருவிளக்கு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் 14 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

2.திண்டுக்கல் மாநகராட்சியில், இப்போது இருக்கும் பழைய பாதாள சாக்கடை மற்றும் சுத்திகரிப்பு நிலையம் 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

3.பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் புனித தீர்த்தங்களான இடும்பன்குளம் மற்றும் சண்முகா நதி 6 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.

4.புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் நத்தம் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 18 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்படும்.

5.அதிக அளவில் முருங்கை பயிரிடப்படும் ஒட்டன்சத்திரத்திற்கு அருகில் இருக்கும் மார்க்கம்பட்டியில் உலகத் தரத்திலான முருங்கை ஏற்றுமதிக்கான பதப்படுத்தும் தொழிற்சாலை 7 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.

6.கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக 100 ஏக்கர் பரப்பளவில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த “சுற்றுலா முதலீட்டு பூங்கா” கொடைக்கானல் வட்டம், வில்பட்டி ஊராட்சியில் சிப்காட் மூலமாக அமைக்கப்படும்.

7.கண்வலிக் கிழங்கு உற்பத்தியில், நம்முடைய நாட்டிலேயே தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது. பெரும்பாலும் ஏற்றுமதி செய்யப்படும் இந்த பயிருக்கு நிலையான, நியாயமான விலை கிடைப்பதற்கு சம்பந்தப்பட்ட ஒன்றிய அரசுத் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

8.ஒட்டன்சத்திரம் நகராட்சியில், அதிகமான குடியிருப்புகள் உள்ள பகுதிகளில், 17 கோடி ரூபாய் செலவில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டுமல்ல, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்னென்ன தேவைகள் என்று பார்த்துப் பார்த்து செய்து கொடுக்கிறோம். இதனால் தமிழ்நாடு, வரலாறு காணாத வளர்ச்சியை இன்றைக்கு பெற்று வீரநடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Read Entire Article