அனிருத் , சாய் அப்யரங்கரை காலி செய்ய வரும் மலையாள இசையமைப்பாளர்..சூர்யா 47 பிஜிஎம் மிரட்டுதே!

3 months ago 6
ARTICLE AD

தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களின் இசை ரசனையை கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமித்து வரும் இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். ரஜினிகாந்த், அஜித், விஜய், கமல்ஹாசன், அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து, இந்திய அளவிலான பிரபலமாக அவர் உயர்ந்திருக்கிறார். அதேநேரத்தில், புதுமுக இசையமைப்பாளரான சாய் அப்யங்கரும் அடுத்தடுத்து பெரிய படங்களில் ஒப்பந்தமாகி, "அடுத்த அனிருத்" என்ற அடையாளத்துடன் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறார்.

சூர்யா 47 படப்பிடிப்பு நிறைவு

இந்நிலையில், இந்த போட்டிக்கு புதிய திருப்பமாக மலையாள திரையுலகின் சென்சேஷன் இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் தமிழ் சினிமாவில் களமிறங்கியிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தின் மூலம் அவர் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஏற்கனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படக்குழு வெளியிட்டுள்ள மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த மேக்கிங் வீடியோவில் இடம்பெற்றுள்ள பின்னணி இசை ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சில நிமிடங்களே இடம்பெற்ற இசை என்றாலும், அதில் சுஷின் ஷியாமின் தனித்துவமான ஸ்டைல் தெளிவாக வெளிப்பட்டிருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், படத்தின் முழு ஆல்பம் மற்றும் பின்னணி இசை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

யார் இந்த சுஷின் ஷியாம்

மலையாள திரையுலகில் சுஷின் ஷியாம் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வைரல் ஹிட் பாடல்களையும், வலுவான பின்னணி இசையையும் கொடுத்து தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். காதல், ஆக்ஷன், திரில்லர் என எந்த வகை படமாக இருந்தாலும், கதையின் உணர்வுகளை இசையின் மூலம் உயிர்ப்பிக்கும் திறன் கொண்ட இசையமைப்பாளராக அவர் பாராட்டப்பட்டு வருகிறார். அதனால் தான், தமிழ் ரசிகர்களும் அவரது அறிமுகத்தை ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.

அனிருத் சாய் அப்யரங்கருக்கு போட்டி

தமிழ் சினிமாவில் தற்போது அனிருத் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், சாய் அப்யங்கர் அடுத்த பெரிய இசையமைப்பாளராக உருவெடுத்து வருகிறார். ஆனால் சுஷின் ஷியாமின் வருகை இந்த போட்டியை முற்றிலும் வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் என்றே கூறப்படுகிறது. குறிப்பாக சூர்யா 47 திரைப்படத்தின் இசை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றால், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கவனம் சுஷின் ஷியாம் பக்கம் திரும்பும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

சூர்யா 47 பற்றி

ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 47-வது திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரொமாஞ்சம், ஆவேஷம் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ஜித்து மாதவன், இந்தப் படத்தின் மூலம் நேரடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Read Entire Article