நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியில் தவெக சார்பாக இளம் பெண் வேட்பாளர் கீர்த்தனா 68 ,709 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஜி அசோகனைக் காட்டிலும் 11 , 670 வாக்குகளை கீர்த்தனா பெற்றார். தனது வெற்றிக் குறித்தும் தேர்தல் பிர்ச்சாரத்தின் போதும் தான் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும் கீர்த்தனா யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

என் வீட்டில் கட்டுபாடுகள் இருந்தன

ஒரு சாதாரண குடுமப பின்னணியில் இருந்து வந்தவர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்றால் அவ்வளவு எளிதாக கிடையாது. இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி. எனக்கு சின்ன வயசில் இருந்தே அரசியலில் ஆர்வம் அதிகம். அதனால் நான் அரசியல் ஆலோசகராக பணியாற்றினேன். முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். பெண் என்றால் அரசியல் பேச கூடாது என்கிற கட்டுப்பாடு என்னுடைய வீட்டிலும் இருந்தது தான் . என் வீட்டிலேயே என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனக்கிருந்தது. அந்த நம்பிக்கை வந்தபிறகு தான் என் வீட்டில் எனக்கு அந்த சுதந்திரம் கிடைத்தது.

விஜய் சொன்ன வார்த்தை

விஜய் சார் எப்போவும் ஒன்னு தான் சொல்லுவார். மக்களுக்கு நல்லது செய்யனும்னு நோக்கம் இருந்தால் மட்டும் போதும் மற்றவர்கள் சொல்வதை நம்பாதீர்கள் என்று. உங்களுடைய லட்சியம் என்னவோ அதை நோக்கி நீங்கள் சென்றுகொண்டிருந்தாலே மக்கள் உங்களை நம்புவார்கள் என்று விஜய் எப்போதும் சொல்வார். விஜய் சார் என்னை வேட்பாளராக நிறுத்தியபோது 'ஜெயிச்சுட்டு வந்துருமா' என்று ஒரே வார்த்தை மட்டும் தான் சொன்னார். எனக்கு வெறும் 29 வயதுதான் ஆகிறது. 29 வயதில் ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்து நாங்கள் இன்னைக்கு கோட்டைக்கே போகப் போகிறோம் என்றால் அது விஜய் அண்ணாவால் மட்டும் தான் முடியும். தவெக மீது எத்தனையோ அவதூறுகள் பரப்பினார்கள். அனில் என்றார்கள் , தற்குறி என்றார்கள். ஆனால் நாங்கள் எந்த விமர்சனத்திற்கும் பதில் சொன்னதில்லை. விஜய் முன்பு எப்படி இருந்தாரோ வெற்றிக்கு பின்னும் அவர் அப்படியே இருக்கிறார். அவர் எளிதாக மாறமாட்டார்.

வெற்றிக்கான காரணம்

வாக்கு எண்ணிக்கையின் போது ஒரு கட்சியின் தலைவர் வரவே இல்லை. இன்னொருவர் பாதியிலேயே போயிட்டார். அவர்கள் செய்யாத விஷயங்களை நாங்கள் செய்தோம். ஒவ்வொருவர் வீட்டிற்கு சென்று அவர்கள் கையை பிடித்து அவர்களின் குறைகளை கேட்டோம். அங்குள்ள மக்கள் நல்ல சாலைகள் வேண்டும் , குடி நீர் வேண்டும் போன்ற ரொம்ப அடிப்படையான கோரிக்கைகளை தான் வைத்தார்கள். சிவகாசியில் நாங்கள் செய்ததை யாரும் செய்ததில்லை. சிவகாசியில் தொழிற்சாலைகள் அதிகம் என்பதால் பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் முதலாளிகளிடம் தான் ஓட்டு கேட்பார்கள். ஆனால் நாங்கள் அடிதட்டு மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டு தெரிந்துகொண்டோம். அந்த நம்பிக்கை தான் அந்த மக்களுக்கு தெரியும்.

என்னை கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள். நாங்கள் சோசியல் மீடியாவில் அரசியல் பேசுகிறோம் என்று சொன்னார்கள். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்போம் என்றார்கள். ஆனால் மக்கள் எங்களுக்கு அவர்கள் ஆதரவை கொடுத்தார்கள். சாட்சியாபுரத்தில் நாங்கள் பிரச்சாரத்திற்கு சென்றபோது அதிமுக மற்றும் பாஜக எங்களை விரட்டினார்கள். வாக்கு செலுத்த போகும்போது கையை எல்லம் பிடித்து இழுத்தார்கள். ஆனால் நாங்கள் அதை வெளியே சொல்லவில்லை.