உலகளவில் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்று மினி கூப்பர். இந்தியாவிலும் இந்த கார் மிகவும் புகழ்பெற்றது. நல்ல வேகம், அதிநவீன வசதிகள் என பல்வேறு அம்சங்கள் கொண்ட இந்த காருக்கு என்று இந்தியாவில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

MINI Cooper S GP Inspired Edition:

இந்த சூழலில், இந்த காரின் புதிய அப்டேட்டாக MINI Cooper S GP Inspired Edition அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பெட்ரோலில் ஓடும் இந்த கார் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட கார் ஆகும்.

எஞ்ஜின் திறன்:

இந்த காரில் 1998 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4 சிலிண்டர் ட்வின்பவர் டர்போ எஞ்ஜின் ஆகும். வெறும் 6.6 நொடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. இந்த கார் ஒரு 3 கதவு மினி கூப்பர் ஆகும். இந்த ஹேட்ச்பேக் கார் சாம்பல் நிறத்திலும், சிவப்பு நிற மேற்கூரை நிறத்திலும் அறிமுகமாகியுள்ளது. 17 இன்ச் ஜேசிடபுள்யூ ஸ்ப்ரின்ட் ஸ்போக் டிசைன் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

விலை என்ன?

இந்த காரின் விலை ரூபாய் 58.9 லட்சம் ஆகும். இந்திய அளவில் வெறும் 30 கார்கள் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 7 கியர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் கிளட் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிசனும் உள்ளது. 9.4 இன்ச் டச்ஸ்கிரீன் உள்ளது. பனோராமிக் மேற்கூரை, வயர்லஸ் சார்ஜர் வசதி உள்ளது. 201 எச்பி மற்றும் 300 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக இந்த காரில் மணிக்கு 242 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

இதன் பெட்ரோல் டேங்கர் 44 லிட்டர் தாங்கும் திறன் கொண்டது. 1285 கிலோ எடை கொண்டது இந்த கார் டிக்கி வசதி 210 லிட்டர் வசதி கொண்டது. லெவல் 1 அடாஸ் வசதி கொண்டது. ஹேட்ச்பேக்கில் பல கார்கள் இருந்தாலும் இந்த கார் மிகவும் சொகுசான காராக உள்ளது. இதன் காரணமாகவே இதன் விலையும் உள்ளது. இந்த காரில் உள்ள வசதிகளே அதற்கு சிறந்த உதாரணம் ஆகும். இந்த கார் 15 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. 300 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.