2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட அண்ணாமலைக்கு வாய்ப்பு தராதது குறித்து தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்லுக்கான வெளியிடப்பட்ட பாஜக வேட்பாளர்களின் பட்டியலில் அண்ணாமலை பெயர் இல்லாமல் இருந்தது அவரது ஆதரவாளர்களுக்கு மட்டுமின்றி, அரசியலை உற்றுநோக்கி வரும் நபர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாமலைக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்?

என்டிஏ கூட்டணியில் உள்ள பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடப்பட்டது. இதில், நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அண்ணாமலை பெயர் இல்லாமல் இருந்ததற்கான காரணம் பல தகவல்கள் சொல்லப்பட்டது. இந்த நிலையில், அண்ணாமலைக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயல் விளக்கம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மாநிலத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள், ஒவ்வொரு வேட்பாளர்களின் விருப்பம் உள்ளிட்ட பல விஷயங்கள் வேட்பாளர் தேர்வில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அண்ணாமலை பாஜகவில் அர்ப்பணிப்புடன் பணியாற்றக்கூடியவர் என்றும் அவர் குறிப்பிட்ட தொகுதி என்றில்லாமல் மாநிலம் முழுவதும் பணியாற்ற விரும்பியதாகவும் கூறினார்.

நயினார் நாகேந்திரன் கொடுத்த விளக்கம்

வேட்பாளர் பட்டியலில் அண்ணாமலை பெயர் இல்லாதது குறித்து நயினார் நாகேந்திரன் கூறுகையில், “இது அகில இந்திய தலைமை எடுத்த முடிவு. தலைமை என்ன சொல்கிறதோ, அதைதான் நாங்கள் செய்வோம்” என்று கூறினார்.

வேட்பாளர்கள் அறிவிப்புக்கு பின் அண்ணாமலை ரியாக்‌ஷன்

“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அனைத்து பாஜக வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்; தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருக்கும் தோளோடுதோள் நின்று பிரச்சாரம் செய்வேன்” என்று அண்ணாமலை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.