TVK Vote Percentage 2026: எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக முதல் தேர்தலில் பெற்ற 30 சதவிகித வாக்குகளை காட்டிலும், விஜயின் தவெக கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளார்.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகி வருகின்றன.மொத்தமுள்ள 234 தொகுதிகளில் தனித்து ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. 11.30 மணி நிலவரப்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் முடிவில், தனிப்பெரும்கட்சியாக உருவெடுக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 தொகுதிகள் என்ற நிலையை தவெக-எட்டுமே என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

38 சதவிகித வாக்குகளை குவித்த தவெக

முன்னதாக திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக எனும் கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர். தனது முதல் தேர்தலிலேயே சுமார் 30 சதவிகித வாக்குகளை பெற்றார். ஆனால், அந்த நிலையை எல்லாம் முறியடித்து 11.30 மணி நிலரவரப்படி, விஜய் தலைமையிலான தவெக சுமார் 38 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எம்.ஜி. ஆரை காட்டிலும் 8 சதவிகிதம் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளார். அதேநேரம், 1977ம் ஆண்டு அதிமுக களமிறங்கிய முதல் தேர்தலிலேயே அந்த கட்சி 130 இடங்களிலும், கூட்டணி 144 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. ஆனால், தற்போதைய நிலவரப்படி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இன்னும் தனிப்பெரும்பான்மையை பெறவில்லை.

ALSO READ | விஜய் சி.எம் ஆக இரண்டு வாய்ப்புகள்.! அடுத்து என்ன நடக்கும்.? தமிழ்நாடே எதிர்பார்க்கும் அந்த ட்விஸ்ட்.?

அரசியல் கட்சிகளின் வாக்கு சதவிகிதம் - 2021 தேர்தல்

அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - 35.4% (கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன்), கூட்டணி கட்சிகளின் ஆதரவை கழித்தால் சுமார் 30% என மதிப்பிடப்படுகிறது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்ட 12 தொகுதிகளிலும் வென்று 33சதவிகித வாக்குகளை பெற்றார்

திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சேர்த்து 25.3% வாக்குகள்

காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு 32 இடங்களில் வென்று 20.4% வாக்குகளை பெற்றது

அரசியல் கட்சிகளின் வாக்கு சதவிகிதம் - 2026 தேர்தல்

காலை 11.30 மணி நிலரவப்படி ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு சதவிகித விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி,

தமிழக வெற்றிக் கழகம் - 38%

திராவிட முன்னேற்றக் கழகம் - 23.95%

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - 22.57%

நாம் தமிழர் கட்சி - 3.93

காங்கிரஸ் - 3.55%

பாஜக - 3.24%

தேமுதிக - 1.03%

விடுதலை சிறுத்தைகள் கட்சி - 0.90%

அடுத்த MGR இல்ல, மொத ஜோசப் விஜய்

எம்.ஜி.ஆர்., அதிமுக எனும் தனிக்கட்சியை தொடங்கி தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்பாக, திமுக ஆட்சியில் அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தார். சுமார் 20 ஆண்டுகள் அரசியல் அனுபவமிக்கவராகவும் திகழ்ந்தார். அதையும் கடந்து கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு ஆட்சியை பிடித்தார். ஆனால், விஜய் கட்சி தொடங்கிய சுமார் ஒன்றரை ஆண்டுகளிலேயே எந்தவித கூட்டணியும் இன்றி தனித்தே களம் கண்டு, சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சி என்ற நிலையை எட்டியுள்ளார்.