எம்.எம் அப்துல்லா பேசுகையில் "சென்ற தேர்தலில் மூஸ்லீம் லீக் எங்களிடம் மூன்று சீட் வாங்கினார்கள். அதில் மூன்றிலும் தோல்வியடைந்தார்கள். இந்த முறை இரண்டு சீட் வாங்கினார்கள். அவர்கள் தோற்றுவிட்டால் திமுக சரியாக வேலை செய்யவில்லை என்று பழி வந்துவிடும் என்பதற்காக பக்கத்து தொகுதியில் இருந்தவர்கள் வேலைப்பார்த்து அவர்களை வெற்றிபெற வைத்தார்கள். திமுக தொண்டர்கள் தனது சொந்த கை காசு போட்டு உங்களை ஜெயிக்க வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் திமுக தோற்றுவிடும் என்று தெரியும் என்று சொல்கிறீர்கள். நீங்கள் தோற்க போகிறீர்கள் என்று தெரிந்தும் நாங்கள் ஜெயிக்க வைக்கிறோம் . அதுதான் கூட்டணி தர்மம். தோற்று விடுவோம் என்று முன்னாடியே தெரியும் என்று சொல்வதா கூட்டணி தர்மம்?

முஸ்லீம் லீக் கட்சி முன்னதாக திமுகவுக்கே தங்களது ஆதரவு என்று தெரிவித்த நிலையில் பின் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததற்கான காரணம் என்ன ? தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதா என்கிற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு எம் எம் அப்துல்லா " குதிரை பேரம் நடக்கவில்லை என்று அவர் சொன்னார். அடிமாட்டு விலைக்கு ஏதும் பேரம் பேசினார்களா என்று தெரியவில்லை " என்று கூறியுள்ளார்