அஜித்தின் மோட்டர் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தில், சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற அஜித் - விஜய் சந்திப்பு காட்சிகளும் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஆவணப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கிளாடியேட்டர்ஸ் ஆவணப்படம்

அஜித்தின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாக வைத்து ‘Gladiators: In Pursuit of Challenges’ என்ற பெயரில் இந்த ஆவணப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அஜித்தின் ரேசிங் அனுபவங்கள், போட்டிகளில் அவர் சந்தித்த சவால்கள், வெற்றிகள் மற்றும் பந்தயத்தின் மீதான அவரது ஆர்வம் ஆகியவை ஆவணப்படத்தில் இடம்பெறுகின்றன. சமீபத்தில் இதன் சிறப்பு டிரெய்லர் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படமாக இது உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

முதல்வர் விஜயை சந்தித்த காட்சிகள்

டிரெய்லரில் அஜித்தின் ரேசிங் வாழ்க்கையைச் சேர்ந்த பல காட்சிகளுடன், அவரது குடும்பத்தினர் இடம்பெறும் தனிப்பட்ட தருணங்களும் இடம்பெற்றிருந்தன. இதனால், அஜித்தை நடிகராக மட்டுமல்லாமல், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது தீவிர ஆர்வம் கொண்டவராகவும் இந்த ஆவணப்படம் பதிவு செய்யும் என தெரிகிறது.

இதற்கிடையில், தமிழக முதல்வரும் நடிகருமான விஜய் லண்டன் சென்றிருந்த நிலையில், சில்வர்ஸ்டோன் பந்தயத் தளத்தில் அஜித்தை நேரில் சந்தித்தார். அஜித் பங்கேற்ற பந்தயத்தை விஜய் தொடங்கி வைத்ததுடன், இருவரும் கட்டித்தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட காட்சிகள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டன.

இந்த சந்திப்பு நடைபெற்ற சூழலில், அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தில் இருவரும் சந்தித்த காட்சிகள் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆவணப்படத்தின் டிரெய்லரில் விஜய் இடம்பெறும் ஒரு காட்சி இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், லண்டன் சந்திப்பு தொடர்பான புதிய காட்சிகளும் இணைக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

அஜித் - விஜய் இருவரும் ஆரம்ப காலத்தில் சில படங்களில் இணைந்து நடித்திருந்தாலும், பின்னர் தனித்தனி பாதையில் பயணித்தனர். இருவரது ரசிகர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த போட்டி சூழலுக்கு மத்தியில், லண்டனில் நடைபெற்ற இந்த சந்திப்பு கவனம் பெற்றது.

அஜித் சில்வர்ஸ்டோனில் மிச்செலின் லீ மான்ஸ் கப் போட்டியின் LMP3 Pro/Am பிரிவில் பங்கேற்றார். அதே நிகழ்வில் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பந்தயத்தை தொடங்கி வைத்தார். இந்த சந்திப்பில் இருவரும் நீண்ட நேரம் உரையாடியதுடன், ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிய காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை பெற்றன. விஜய் பின்னர் இந்த சந்திப்பு தொடர்பான வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

இதனால், ஏற்கனவே அஜித்தின் பந்தயப் பயணத்தை மையமாகக் கொண்டிருந்த ஆவணப்படத்துடன், சமீபத்திய லண்டன் நிகழ்வும் இணைவது ரசிகர்களுக்கு கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.