அசத்தலான மைலேஜ்! கலக்கலான லுக்கில் Honda SP 160! விலை எவ்ளோ தெரியுமா?

1 week ago 4
ARTICLE AD

இந்தியாவின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகன நிறுவனம் ஹோண்டா. இவர்களின் பல்வேறு படைப்புகள் இந்தியாவில் நன்றாக விற்பனையாகி வருகிறது. இவர்களில் வெற்றிகரமான இரு சக்கர வாகனங்களில் ஒன்று Honda SP160. இந்த பைக் பற்றி கீழே விரிவாக காணலாம்.

Honda SP160:

ஹோண்டாவின் Honda SP160 பைக்கில் மொத்தம் 2 வேரியண்ட்கள் உள்ளது. ஒன்று SP160 Single Disc. மற்றொன்று SP160 Double Disc. இதன் விலை

1.SP160 Single Disc - ரூபாய் 1 லட்சத்து 45 ஆயிரத்து 002

2.SP160 Double Disc - ரூபாய் 1 லட்சத்து 51 ஆயிரத்து 303

மைலேஜ்:

இதில் டிஸ்க் ப்ரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முதல் வேரியண்ட் 138 கிலோ ஆகும். இரண்டாவது வேரியண்ட் 140 கிலோ ஆகும். இந்த Honda SP160 பைக் நீலம், சிவப்பு, சாம்பல் மற்றும் கருப்பு வண்ணங்களில் காணப்படுகிறது.

இந்த பைக்கில் 162.71 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 கியர்கள் உள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. இதன் பெட்ரோல் டேங்கரில் 12 லிட்டர் வரை பெட்ரோல் நிரப்பலாம்.

சிறப்புகள்:

இது 14.58 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 1 கியர் கீழேவும் மற்ற 4 கியர்கள் மேலேவும் இயக்கும் வகையில் உள்ளது. 13.27 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 600 கிலோமீட்டர் வரை செல்லலாம்.

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதி கொண்டது. இதில் ட்யூப்லஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் 17 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் டெலிஸ்கோபிக் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் மோனாேஷாக் பொருத்தப்பட்டுள்ளது.

வாரண்டி:

1.9 லிட்டர் ரிசர்வ்ட் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 177 மி.மீட்டர் வசதி கொண்டது. 42 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 3 வருட வாரண்டி கொண்டது. 3 சர்வீஸ் இலவசம் ஆகும். 4.2 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே வசதி கொண்டது. ப்ளூடூத் வசதி கொண்டது. மைலேஜ் இண்டிகேட்டர் வசதி கொண்டது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஃஜ் டிஜிட்டல் வசதி கொண்டது.

ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர் வசதி உள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர், லோ ஃப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஹாலோஜன் விளக்குகள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளிலும், நகர்ப்புறங்ககளிலும் செல்வதற்கு ஏற்றதாக இந்த பைக் உள்ளது.

Read Entire Article