இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் யமஹா. பைக்குகள் மட்டுமின்றி ஸ்கூட்டர் தயாரிப்பிலும் அசத்தி வருகிறது. இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், யமஹா நிறுவனமும் மின்சார வாகன தயாரிப்பில் இறங்கியுள்ளது.

Yamaha EC 06:

யமஹாவின் Yamaha EC 06 மின்சார ஸ்கூட்டர் தற்போது இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்பு உண்டாகியது. இந்த இ ஸ்கூட்டரான Yamaha EC 06-ன் விலை ரூபாய் 1 லட்சத்து 76 ஆயிரத்து 501 ஆகும். இந்த இ ஸ்கூட்டரில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது.

மைலேஜ்:

EC 06 Standard என்று அந்த வேரியண்டிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் 4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது லித்தியம் அயன் பேட்டரி ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 169 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.

இதில் அதிகபட்சமாக 79 கிலோமீட்டர் வேகம் வரை செல்லலாம். 132 கிலோ எடை கொண்டது. யுஸ்பி சார்ஜிங் வசதி கொண்டது. 100 சதவீதம் சார்ஜ் வீட்டிலே ஏற்றுவதற்கு 10 மணி நேரம் ஆகிறது. 26 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. சிபிஎஸ் ப்ரேக்கிங் வசதி கொண்டது. அலாய் சக்கரங்கள் உள்ளது.

சிறப்புகள்:

ட்யூப்லஸ் சக்கரங்கள் கொண்டது. சக்கரங்கள் 14 இன்ச் ஆகும். 3 வருடங்கள் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டி கொண்டது. 145 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டது. எல்சிடி டிஸ்ப்ளே கொண்டது. ப்ளூடூத் வசதி கொண்டது.

செல்ஃப் ஸ்டார் வசதி ஆகும். ரிவர்ஸ் எடுக்கும் வசதி உள்ளது. மொபைல் ஆஃப் வசதி உள்ளது. பேட்டரி ஸ்டேட்டஸ் பார்த்துக்கொள்ளலாம். எல்இடி முகப்பு விளக்குகள் உள்ளது. 24.5 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. இது நீலம் வெள்ளை கலந்த நிறத்தில் மட்டுமே உள்ளது.

இந்தியாவில் ஏதர், ஓலா ஆகிய நிறுவனங்கள் இ ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வருகின்றனர். இ ஸ்கூட்டர் தயாரிப்பிலும் கோலோச்ச வேண்டும் என்ற எண்ணத்தில் டிவிஎஸ், ஹோண்டா ஆகிய நிறுவனங்களும் இ ஸ்கூட்டர் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது.

தற்போது யமஹாவும் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்கியுள்ளது. யமஹாவின் ஸ்கூட்டர்களுக்கும் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.