Yamaha XSR 155 vs Royal Enfield Hunter 350: யமஹாவின் XSR 155 மற்றும் ராயல் என்ஃபீல்டின் Hunter 350 மோட்டார் சைக்கிள்களின் மைலேஜ், விலை உள்ளிட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

யமஹாவின் XSR 155 Vs ராயல் என்ஃபீல்ட் Hunter 350:

யமாஹா நிறுவனத்தின் XSR 155 மோட்டார் சைக்கிளானது தனது இன்ஜின் மற்றும் சேஸிஸை, R15 மற்றும் MT-15 ஆகிய மாடல்களுடன் பகிர்ந்து கொள்கிறது. மேலும் இது ரெட்ரோ ஸ்போர்ட் மோட்டார் சைக்கிள் என ப்ராண்டால் அடையாளப்படுத்தப்படுகிறது. அதேநேரம், ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350 மாடலானது இயல்பாகவே பழைய ரெட்ரோ வைபை கொண்டுள்ளது. இரண்டுமே ஒரே மாதிரியான அற்றல் வெளிப்பாடு மற்றும் விலையை கொண்டு எளிதில் அணுகக் கூடிய மாடல்களாக உள்ளன. அவற்றின் ஒப்பீட்டு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

XSR 155 Vs Hunter 350: ஆக்சிலரேஷன்

பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுவதில், ஹண்டர் 350 மாடலை காட்டிலும் யமாஹாவின் XSR 155 மாடல் 3.5 விநாடிகள் வேகமாக உள்ளது.

ஆக்சிலரேஷன்

யமாஹா XSR 155

ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350

0-60Kph

4.29 விநாடிகள்

4.95 விநாடிகள்

0-80Kph

7.02 விநாடிகள்

8.75 விநாடிகள்

0-100Kph

11.66 விநாடிகள்

15.15 விநாடிகள்

ஹண்டரின் இன்ஜின் அளவு இரண்டு மடங்கிற்கும் அதிகமான அளவில் பெரியதாக இருந்தாலும், XSR 155 மாடலின் இன்ஜின் செயல்திறனில் மேம்பட்டதாக உள்ளது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 11.66 விநாடிகளிலேயே எட்டிவிடுகிறது. ஆனால், ஹண்டருக்கு 15.15 விநாடிகள் தேவைப்படுகிறது. இரண்டு வாகனங்களுமே நெடுஞ்சாலைகளில் எளிதாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். ஆனாலும், XSR 155 மாடல் அதிகபட்ச வேகத்தை கொண்டிருப்பதோடு, கூடுதல் பலமாக 6வது கியரையும் கொண்டிருக்கிறது.

XSR 155 Vs Hunter 350: கியர் மாற்றம்

ஹண்டர் 350 மாடலை காட்டிலும் XSR 155 மாடல் ஆனது 44 கிலோ கிராம் குறைந்த எடையை கொண்டுள்ளது.

ரோன் - ஆன் ஆக்சிலரேஷன்

யமாஹா XSR 155

ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350

20-50Kph

3.00 விநாடிகள்

3.39 விநாடிகள்

30-70Kph

5.73 விநாடிகள்

6.26 விநாடிகள்

50-80Kph

5.70 விநாடிகள்

6.68 விநாடிகள்

நகர்ப்புறங்களில் ஹண்டர் 350 மாடலானது வலுவான ஆற்றலை உற்பத்தி செய்கிறது. போக்குவரத்து நெரிசலில் சிக்கும்போதும் பெரிய அளவில் கியர்களை மாற்ற வேண்டியதில்லை. 3வது கியரில் கூட மிதமான வேகத்தில் பயணிக்கலாம். ஆனால், XSR 155 மாடலில் சீரான ஆக்சிலரேஷனை அடைய கியரை மாற்ற வேண்டியுள்ளது. இரண்டிலும் ஸ்லிப் -அண்ட்-க்ளட்ச் வழங்கப்பட்டுள்ளது. 5.5 அடிக்கும் குறைவான உயரம் கொண்டவர்கள், ஹண்டர் சரியான மாடலாக இருக்கும். 790 மில்லி மீட்டர் உயரத்துடன் அணுகக்கூடிய உயரத்தை கொண்டிருக்கும். XSR 155 மாடலில் இருக்கையானது 810 மில்லி மீட்டர் உயரத்தை கொண்டுள்ளது.

XSR 155 Vs Hunter 350: ப்ரேக்கிங் செயல்திறன்

ஹண்டர் 350 மாடலை காட்டிலும் XSR 155 ஆகிய இரண்டு மாடல்களின் ப்ரேக்கிங் செயல்திறனும் ஒரே மாதிரியாக உள்ளது.

60-0Kph ப்ரேக்கிங் டெஸ்ட்

யமாஹா XSR 155

ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350

60-0Kph

19.84 மீட்டர்

19.36 மீட்டர்

மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ப்ரேக்கை பயன்படுத்தியதில் வாகனம் முழுமையாக நிற்பதற்கு முன்பு சுமார் 19 மீட்டர் தூரம் வரை பயணித்தது. இந்த அம்சத்தில் இரண்டு வாகனங்களுமே ஒரே மாதிரியான திறனையே கொண்டுள்ளன.

XSR 155 Vs Hunter 350: அம்சங்கள், விலைகள்

XSR 155 மாடலானது ஒரே ஒரு வேரியண்டில் விற்பனை செய்யப்பட, ஹண்டர் 350 மாடலானது 3 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

அம்சங்கள்

யமாஹா XSR 155

ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350

இன்ஜின்

155cc, சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்ட்

349cc, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்ட்

ஆற்றல்

10,000rpm-ல் 18.4hp

6,100rpm-ல் 20hp

டார்க்

7,500rpm-ல் 14.2Nm

4,000rpm-ல் 27Nm

கியர்பாக்ஸ்

6 ஸ்பீட்

5 ஸ்பீட்

எரிபொருள் கொள்ளளவு

10 லிட்டர்

13 லிட்டர்

வாகன எடை

137 கிலோ

181 கிலோ

ப்ரேக்ஸ் (முன்/பின்புறம்)

282மி.மீ., டிஸ்க் / 220மி.மீ., டிஸ்க்

282மி.மீ., டிஸ்க் / 220மி.மீ., டிஸ்க்

டயர் (முன்/பின்புறம்)

100/80-17 / 140/70-17

110/70-17 / 140/70-17

விலை (எக்ஸ் ஷோ-ரூம்)

ரூ.1.5 லட்சம்

ரூ.1.38 லட்சம் - ரூ.1.67 லட்சம்

மைலேஜ்

சுமார் 45-50 கிலோ மீட்டர்/லிட்டருக்கு

சுமார் 35-35 கிலோ மீட்டர்/லிட்டருக்கு

XSR 155 மோட்டார் சைக்கிளின் தொடக்க விலையான ரூ.1.5 லட்சத்தை காட்டிலும், R15 மற்றும் MT15 மாடல்களின் தொடக்க விலையானது 12 ஆயிரம் ரூபாய் மலிவாக உள்ளது. ஹண்டர் 350 மாடலின் அதிகபட்ச விலையானது 1.67 லட்சம் ஆகும். இது XSR 155 மாடலை காட்டிலும் 17 ரூபாய் அதிகமாகும்.

XSR 155 Vs Hunter 350 - வசதிகள்:

அம்சங்கள் அடிப்படையில், XSR 155 மோட்டார் சைக்கிளில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், கால் மற்றும் மெசேஜ் நோடிஃபிகேஷன்களுக்கான ஸ்மார்ட்போன் கனெக்ட், ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் மற்றும் யமஹாவின் வேரியபிள் வால்வு ஆக்சுவேஷன் (VVA) அமைப்பு ஆகியவற்றைப் கொண்டுள்ளது. மேலும் USD முன்புற ஃபோர்க், ஒரு மோனோஷாக், முழுமையான LED லைட்டிங் மற்றும் ஒரு அசிஸ்ட்-அண்ட்-ஸ்லிப்பர் கிளட்ச் போன்ற பிரீமியம் ஹார்ட்வேர்களை பெற்றுள்ளது. மறுபுறம், ஹண்டர் 350 தனக்கான அம்சங்களை எளிமையாகவும் பாரம்பரியமாகவும் வைத்திருக்கிறது. இது ஒரு செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைக் கொண்டிருந்தாலும் அதில் டேகோமீட்டர் இல்லை. ஆனால் டாப் வேரியண்ட்களில், பைக்கில் டர்ன்-பை-டர்ன் வழிகாட்டுதலுக்கான ராயல் என்ஃபீல்டின் டிரிப்பர் நேவிகேஷன் பாட் உள்ளது. இந்த அம்சம் XSR மாடலில் இல்லை. கூடுதலாக, XSR 155 ஒரு ட்ராக்‌ஷன் கன்ட்ரோல் அமைப்பையும் பெறுகிறது. இது ஹண்டர் 350 வாகனத்தில் இல்லை.

யாருக்கு எது பெஸ்ட்?

ஒட்டுமொத்தத்தில் XSR155 வெளிப்படையான செயல்திறனை விரும்பும் இளைஞர்களுக்கான சரியான தேர்வாக உள்ளது. அதே நேரத்தில் ஹண்டர் 350 மிகவும் நிதானமான மற்றும் வசதியான சவாரி அனுபவத்தை மதிக்கும் ரைடர்களுக்கான வாய்ப்பாக விளங்குகிறது.