WPL 2026 MI vs RCB: தொடங்கியது WPL திருவிழா.. வெற்றியுடன் தொடங்குவது ஆர்சிபியா? மும்பையா?

3 months ago 6
ARTICLE AD

இந்தியாவில் ஆடவர்களுக்காக ஐபிஎல் கிரிக்கெட் நடத்தப்படுவது போலவே, மகளிர்களுக்காக டபுள்யூபிஎல் நடத்தப்படுகிறது. நடப்பாண்டிற்கான டபுள்யூபிஎல் தொடர் இன்று மும்பையில் தொடங்கியுள்ளது.

தொடங்கிய டபுள்யூபிஎல்:

4வது சீசனின் முதல் போட்டியான இன்று நடப்பு சாம்பியன் மும்பை அணியும், முன்னாள் சாம்பியனான ஆர்சிபி அணியும் மோதுகின்றன. கோலாகலமான கலைநிகழ்ச்சிகளுக்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. இந்த கலைநிகழ்ச்சிக்கு முன்பு டாஸ் போடப்பட்டது. அதில், பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா டாஸ் வென்றார். அவர் மும்பை அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.

மும்பை பேட்டிங்:

இதையடுத்து, மும்பை அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கி ஆடி வருகிறது. மும்பை அணிக்காக கமாலினி - அமெலியா கெர் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். பெங்களூர் அணிக்காக லாரன் பெல் பந்துவீசி ஆட்டத்தை தொடங்கியுள்ளார். ஐபிஎல் போட்டிக்கு நிகரான ரசிகர்கள் கூட்டம் டபுள்யூபிஎல் தொடருக்கும் உள்ளது. குறிப்பாக, மும்பை - பெங்களூர் அணிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனால், மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மும்பை அணி விவரம்:

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை அணியில் அமெலியா கெர், கமாலினி, நட்ஸ்சிவெர் ப்ரண்ட், அமன்ஜோத் கவுர், நிகோலா கேரி, பூனம் கெம்னர், ஷப்னிம் இஸ்மாயில், சன்ஸ்கிரிதி குப்தா, சஜீவன், சஜனா, சைகா இஷாக் களமிறங்கியுள்ளனர்.

பெங்களூர் அணி விவரம்:

ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணியில் கிரேஸ் ஹாரிஸ், தயாளன் ஹேமலதா, ரிச்சா கோஷ், ராதா யாதவ், நாடின் டி கிளெர்க், அருந்ததி ரெட்டி, ஸ்ரேயங்கா பாட்டீல், ப்ரேமா ராவத், லின்சி ஸ்மித், லாரன் பெல் களமிறங்கியுள்ளனர்.

விறுவிறுப்பு:

இரு அணிகளும் ஏற்கனவே கோப்பையை வென்ற அணிகள். நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ள மும்பை அணிக்கு சொந்த மண்ணில் ஆடுவது பலமாகும். முன்னாள் சாம்பியனான ஆர்சிபியும் பலமான பேட்டிங், பந்துவீச்சுடன் களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மும்பை அணிக்கு அமெலியா கெர், நட் ஸ்கிவர், ஹர்மன்ப்ரீத், சஜானா, முக்கிய வீராங்கனைகள் ஆவார்கள். ஆர்சிபி அணிக்கு ஸ்மிரிதி மந்தனா, கிரேஸ், தயாளன், ரிச்சா , ராதா யாதவ், அருந்ததி ரெட்டி முக்கிய வீராங்கனைகள் ஆவார்கள். இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது.

Read Entire Article