<p><strong>WB Lok sabha Election 2024 Result:</strong> மேற்குவங்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவ தேர்தலில், பாஜகவை பின்னுக்கு தள்ளி பெரும்பாலான தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. 10.50 நிலவரப்படி, மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 27 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி 13 இடங்களிலும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி 2 இடங்களிலும் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. </p>
<p>முன்னதாக, கருத்துகணிப்புகள் பெரும்பாலும், பாஜகவே பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றும் என தெரிவித்தன. ஆனால், கருத்து கணிப்புகளை பொய்யாக்கி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தற்போது, பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.</p>